ரஜினிக்காக கதை எழுதிய கவிஞர் கண்ணதாசன்! மேலும் இருவர் இணைந்து நடித்த திரைப்படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனது 72 ஆவது வயதிலும் முன்னணி ஹீரோவாக நடித்து கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் தனது ஸ்டைலாலும், சுறுசுறுப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலக அளவில் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து ரஜினிக்கு மிகச் சிறந்த கம்பேக் கொடுத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினி மீண்டும் அதே உற்சாகத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தற்போது ரஜினி தனது 170 ஆவது படத்தை ஞானவேலு இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 171வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு வெளியாகும் இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைக்கு பிரம்மாண்ட இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து பல படங்களில் இணைந்து தரமான படங்களை கொடுத்து வரும் ரஜினி, தனது தொடக்க காலங்களில் முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்களை உடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு படம் தான் தில்லுமுல்லு. 1981 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம் ஆக வெளியாகி இருந்தது. ஆக்சன் ஹீரோவாக கலக்கிய ரஜினிக்கு இந்தத் திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

தற்பொழுது இந்தப் படம் குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரஜினிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்தப் படத்தின் கதையை ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி மக்களின் மனதில் இடம் பிடித்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் தான் தில்லு முல்லு படத்திற்கு கதை எழுதியதாக தகவல் கிடைத்துள்ளது. கண்ணதாசன் அவர்கள் சில படங்களை தயாரித்த நிலையில் ரஜினிக்காக அவர் கதை எழுதியது யாருக்கும் தெரியாத தகவலாக இருந்துள்ளது.

நயன்தாரா படத்தில் ஹீரோயினாகும் திரிஷா!

அதற்கு முன்னதாக 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அபூர்வராகங்கள். இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் பாடல் எழுதி இருப்பார். மேலும் ஒரு சிறப்பாக இந்த படத்தில் அவர் ரஜினியுடன் இணைந்து கண்ணதாசன் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார் என்பது கூடுதல் தகவலாக அமைந்துள்ளது

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...