உனது இசையா? எனது பாட்டா? குன்னக்குடி வைத்தியநாதன் vs கண்ணதாசன் போட்டியில் உருவான ஹிட் பக்திப் பாடல்!

சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கதையை ஒட்டி நிஜ வாழ்விலும் கவிஞர் கண்ணதாசனுக்கும், குன்னகுடி வைத்தியநாதனுக்கும் ஓர் ஆரோக்கிய இசைப் போட்டி நடந்துள்ளது. சரஸ்வதி சபதத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என்ற போட்டி இருக்கும். ஆனால் இவர்கள் இருவருக்கிடையில் உனது இசையா? எனது பாட்டா என்ற கடும் போட்டி நடந்து இறுதியில் ஒரு அழகான சூப்பர் ஹிட் பக்திப் பாடல் உருவானது.

தேவர் பிலிம்ஸ் சார்பில் வெளிவந்த தெய்வம் படத்தில் இடம்பெற்ற மருதமலை மாமணியே முருகைய்யா என்ற அற்புதப் பாடலுக்காக ன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.

அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன ‘மருதமலை மாமணியே’ பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து ‘இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்’ என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்…

“சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்”.

அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்.. கண்ணதாசன் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன், வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து “ஐயா, என்னை விட்டுடுங்க”ன்னு கும்பிட்டேன் என்றார்… கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும்.

மேலும் இப்பாடலை இயற்றும் போது கண்ணதாசன் தன் மகளுக்காக திருமணத்தை நிச்சயித்திருந்த சமயம் அது. பணம் தட்டுப்பாடு காரணமாக ஆழ்ந்த யோசனையிலேயே இந்தப் பாடலை இயற்ற தேவர் மகிழ்ந்து உடனே ஒரு லட்சம் பணத்தை அளித்து பாட்டின் மகிமையில் மயங்கிவிட்டாராம். தீவிர முருகபக்தரான சின்னப்பதேவரை இந்தப் பாடல் மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.