பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தை இன்பத்தில் ஆழ்த்திய மக்கள் திலகம் எம்ஜிஆர்!

தமிழ் சினிமாவிற்கு பொன்மலச்செம்மல் எம்ஜிஆர் போன்று கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் ராஜ்குமார். 1945 ஆம் ஆண்டு வெளியான பெதார‌ க‌ன்னப்பபா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜ்குமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்துள்ளார். சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் இவர் பின்னணி பாடகர் ஆகவும் பல பாடல்களை பாடி விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் கன்னட ரசிகர்கள் இவரை டாக்டர் ராஜ் மற்றும் அன்னவாரு என செல்லப் பெயர்கள் வைத்து அன்பாக அழைத்து வந்துள்ளனர். கன்னடத்தில் பிரபல நடிகராக ராஜ்குமாரும் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறந்த நண்பர்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

இந்த இரண்டு பிரபலங்களுக்கும் இடையே நட்பை தாண்டி அண்ணன் தம்பி போன்ற நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது. இருவரது குடும்பமும் நல்ல நட்புறவோடு பழகி வந்துள்ளனர். நடிகர் எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது வழக்கம். அப்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு அருகில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி இருந்தார். அதே ஹோட்டலில் தான் நடிகர் எம்.ஜி.ஆரும் தங்கி இருந்தார். எம்ஜிஆர் படப்பிடிப்பு முடித்துவிட்டு தன் கட்சி உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டே ஹோட்டலின் உள் நுழைந்தார். அப்படியே விறுவிறுப்பாக பேசி சென்ற எம் ஜி ஆர் லிப்டில் ஏற சென்றார். அதை கவனித்த ராஜ்குமார் அண்ணன் தீவிர ஆலோசனையில் இருப்பதை புரிந்து கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று, அண்ணன் முதலில் செல்லட்டும் என வழிவிட்டு உள்ளார். எம்ஜிஆர் கட்சி ஆலோசகர்களுடன் பேசிக்கொண்டே லிப்டில் ஏறி மாடி சென்றுள்ளார்.

அதன் பின் லிப்ட் கீழே வந்தது ராஜ்குமார் உள்ளே ஏற சென்றார். அப்பொழுது உள்ளே எம்ஜிஆர் இருப்பதை அறிந்து கொண்டார். அண்ணா நீங்கள் மேலே செல்ல வில்லையா என கேட்டார். தம்பி நீ எனக்காக ஒதுங்கி நிற்பது போல என் உள் உணர்வு சொன்னது அதான் வந்து பார்த்தேன் எனக் கூறி ராஜ்குமார் உடன் மிக நெருக்கமாக பழகி தன் அறைக்கு அழைத்துச் சென்றார் எம் ஜி ஆர். அதன் பின் நடிகர் ராஜ்குமாருக்கு காபி விருந்து அளித்து உபசரித்து அனுப்பி வைத்தார். எம்ஜிஆரின் வள்ளல் தன்மையை நேரில் பலமுறை பார்த்த ராஜ்குமார் எம்ஜிஆர் மறைந்த போது தர்மத்தின் கடவுள் எம்ஜிஆர் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பிற்காக எம்ஜிஆர் சென்றபோது அங்கே நடிகர் ராஜ்குமார் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக வந்திருந்தார்.

ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழிக்க வைத்த எம் ஜி ஆர்! நடந்தது என்ன!

இருவரும் சூட்டிங் பிரேக்கில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது ராஜகுமாரின் மகனும் அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். சிறுவனாக நடிக்க தொடங்கி இன்றைய கன்னட சினிமாவின் பிரபல ஹீரோவாக வலம் வரும் சிவராஜ் குமாரை தன் மடியில் உட்கார வைத்து ஆசீர்வதித்தார் எம்ஜிஆர். 1986 ஆம் ஆண்டு சிவராஜ் குமாருக்கு திருமணம் நடந்தது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று மூன்றாம் முறையாக முதல்வராக இருந்தார் எம்ஜிஆர். அவரை ராமாபுரம் வீட்டில் சந்தித்த ராஜ்குமார் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளேன் அதற்காக உங்களுக்கு பத்திரிக்கை வைக்க வந்துள்ளேன். ஆனால் உங்கள் உடல்நிலை ரொம்ப முக்கியம் அண்ணா அதனால் திருமணம் முடிந்ததும் மணமக்களை உங்களிடம் அழைத்து வருகிறேன் நீங்கள் அவர்களை நிச்சயமாக ஆசீர்வதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அண்ணா உங்களுக்கு அலைச்சல் வேண்டாம் உங்கள் உடல்நிலை தான் ரொம்ப முக்கியம் என ராஜ்குமார் பாசத்துடன் கூறினார். பத்திரிகை பெற்றுக் கொண்ட எம்ஜிஆர் எதுவும் சொல்லவில்லை சிரித்துக் கொண்டே ராஜ்குமாரை வழி அனுப்பினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று அதிர்ச்சி தரும் விதமாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய எம்ஜிஆர், நீங்க கூப்பிடலன்னாலும் வந்து வாழ்த்துவேன் என சொல்லி ராஜ்குமார் குடும்பத்தை பாசத்தால் நெகிழ வைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.