புலியுடன் மோதும் சிங்கம் சூர்யா!.. கங்குவா டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?.. இப்படி மிரட்டுதே!..

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. மாலை 4:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட டீசர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று தாமதமான நிலையில் 5:30 மணி அளவில் வெளியானது.

டீசர் முழுக்க பாகுபலி ரேஞ்சுக்கு பீரியட் போர்ஷன் மட்டுமே காட்டியிருக்கிறார் சிறுத்தை சிவா. கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படம் பிளாஷ்பேக் காட்சிகள் எந்த அளவுக்கு மிரட்டியது அதேபோல கங்குவா படத்தின் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

கங்குவா டீசர் ரிலீஸ்:

டீசரின் துவக்க காட்சியில் புலியுடன் நடிகர் சூர்யா மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பரபரப்பாக செல்லும் டீசரில் சூர்யா மற்றும் பாபி தியலின் வெறித்தனமான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மரத்தைப் பிடுங்கி அடிப்பது, கையில் தீப்பந்தத்துடன் நிற்பது, கர்ஜிப்பது என சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் 24 ஆத்ரேயாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

உதிரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிமல் படத்தின் வில்லன் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் காட்சிகளும் கிளைமாக்ஸில் அவர் சூர்யாவுடன் மோதும் காட்சிகளும் தியேட்டரை தெறிக்க விடும் என்றே தெரிகிறது. சூர்யா மற்றும் பாபி தியோல் தவிர வேறு யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு டீசர் கட்ஸ் வேகவேகமாக சென்று விடுகிறது.

படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஒரு காட்சியில் கூட அவரை காணவில்லையே என கங்குவா படத்தின் பூஜையில் தேடியது போலவே ரசிகர்கள் டீசரிலும் தேடி வருகின்றனர். அந்த முதலை கண் திறக்கும் காட்சி, கண்களை மூடிக்கொண்டு பெண்கள் சடங்கு செய்யும் காட்சிகள் என பல்வேறு காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தில் நிகழ்ச்சியில் தான் இந்த டீசரே வெளியானது குறிப்பிடத்தக்கது . எதற்கும் துணிந்தவன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய நிலையில், பல்வேறு மொழிகளில் வெளியாக காத்திருக்கும் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வசூல் பெட்டியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படமாக இந்த படம் மாறுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...