விஜய்க்காக அஜித் படத்தில் இருந்து பாடலை காப்பியடித்த அனிருத்! அதிர்ச்சி அப்டேட்!

நடிகர் விஜய் நடிப்பில் லியோ படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய நான் ரெடி பாடல் அஜித் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தற்போழுது வைரலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

லலித் குமார் தயாரிப்பில் லியோ படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் அனிருத் திசையில் விஜய்ப் பாடியுள்ளார். வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் பாடல் வெளியானால் அது எந்த பாடலில் இருந்து காபி அடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க பலர் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் அடிக்கடி காப்பி சர்ச்சையில் சிக்கும் அனிருத் தற்போது நா ரெடி பாடலுக்காக சிக்கியுள்ளார். இந்நிலையில் விஜய்ப் பாடிய நா ரெடி பாடல் பல்வேறு பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெறும் திருப்பதி வந்தா திருப்பம் பாடலின் டியூனும் நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாக ஒப்பிட்டுள்ளார்கள். அனிருத் அஜித் பாடலை காபி அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் தலைப்பு செய்தியாக வளம் வரும் தேவர் மகன் – மாமன்னன் படம் சர்ச்சை குறித்த அப்டேட் இதோ!

மேலும் வேறு பாடலில் இருந்து மட்டுமல்லாமல் அவரது பாடலிலிருந்து அவர் காப்பியடிப்பார் என்று ஜலபுல ஜங், மாரி படத்தின் தர லோக்கல் சாங், மாஸ்டர் படத்தின் வாக்கி கம்மிங் பாடல் ஆகியவற்றின் டியூன்களும் நா ரெடி பாடலின் டியூன்களும் ஒன்றாக இருப்பதாகவும் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர்.

பாடல்கள் காப்பி சர்ச்சை அனிருத்திற்கு புதிதல்ல என்றாலும் இதற்கு முன்பு அப்படி கூறப்பட்ட பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதை போல் இந்த பாடலும் சூப்பர் ஹிட் வரிசையில் முன்னணியில் இருக்கும் என நம்ம்புகின்றனர்.

இதற்கு சான்றாக நேற்று பாடல் வெளியான 14 நிமிடத்தில் 10 இலட்சத்திற்கு அதிகமானோர் இந்த பாடலை பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...