கமலுக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுத்த ‘பட்டாம் பூச்சி‘.. காதல் இளவரசி யாருன்னு தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் திரையில் சந்திக்காத சாதனைகளும் இல்லை சோதனைகளும் இல்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக சினிமாவையே கரைத்துக் குடித்தவர். இவர் உலக நாயகன் ஆவதற்கு முன் காதல் இளவரசன் என்று தான் ரசிகர்கள் அவருக்குப் பட்டம் சூட்டியிருந்தனர். ஏனெனில் கமலின் ஆரம்ப காலப் படங்கள் அனைத்துமே காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையாகவே இருந்தது.

களத்தூர் கண்ணம்மாவில் நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துவிட்டு, பதின்பருவத்தில் நடன இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறத்தி மகன் படத்தில் சின்ன வேடம் ஒன்றில் தோன்றினார். பிறகு சிறுசிறு வேடங்களில் தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்தார்.

1974 இல் கன்னியாகுமரி மலையாளப் படத்தில் தான் முதன் முதலாக நாயகனானார். ஆமாம், கமலை முதன்முதலில் நாயகனாக்கியது மலையாள சினிமாதான். ஆனால் தமிழில் அவர் ஹீரோவாக அறிமுகமான படம் பட்டாம்பூச்சி. ஆனால் பட்டாம்பூச்சி படத்திற்கு முன் ஆர்.சி.சக்தி தனது உணர்ச்சிகள் படத்தில் கமலை நாயகனாக்கினார். படம் வெளியாக தாமதமாக, பட்டாம்பூச்சி முந்திக் கொண்டு 1975, பிப்ரவரியில் வெளியாகி, கமல் நாயகனாக நடித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெயரை தட்டிச் சென்றது.

நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன சினிமா வெறி.. அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்

பட்டாம்பூச்சி படத்தில் நாயகியாக நடித்தவர் ஜெயசித்ரா. இவர் கமல் பிரசாத் மாஸ்டரின் நடனக் குழுவில் இருந்த போது அந்தக் குழுவில் டான்சராக இருந்தவர். பல படங்களில் கமலைப் போல் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக குறத்தி மகன் படத்தில் கமலுடன் நடித்தார். அதில் கமலைவிட ஜெயசித்ராவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் தரப்பட்டிருந்தது. பட்டாம்பூச்சியில்தான் அவரும் தனி நாயகியாக அறிமுகமானார்.

கமலை காதல் இளவரசன் என்றும், ஜெயித்ராவை காதல் இளவரசி என்றும் அடைமொழி தந்து டைட்டிலில் இந்தப் படத்தில் தான் அறிமுகப்படுத்தியிருந்தனர். நாயகன் படம் முதல் கமல் தனது பாதையை வேறு திசையில் மாற்றிக் கொள்வதுவரை, காதல் இளவரன் என்ற பட்டத்துடன்தான் அறியப்பட்டார்.

பட்டாம்பூச்சி படத்தில் ரோட்டோர டிபன் கடை நடத்துகிறவர் ஜெயசித்ரா. அவரின் ஹோட்டலுக்கு சாப்பிட வரும் காட்சியில் கமலிடம் ஜெயசித்ரா, “சார் யாரு?” என்று கேட்க, கமல், “ஹீரோ” என்பார்.
“எந்தப் படத்துல?”
“இனிமே எடுக்கப்போற படத்துல…”
“அடடே… வருங்கால நட்சத்திரம்….”
கமலின் அறிமுகக் காட்சியிலேயே அவர் ஹீரோவாக நடிக்கிற முதல் படம் இது என்பதை குறிப்பிட்டு வசனம் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...