நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன சினிமா வெறி.. அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்

இதுவரை நாம் அதிகபட்சமாக தமிழ் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நிறையவே படித்திருப்போம். அதேபோல் இந்தியில் அமிதாப், தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் ராஜ்குமார் போன்றோரைப் பற்றியும் ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து ஹாலிவுட்டையே அதிர வைத்த ஒரு ஹீரோவான சில்வஸ்டர் ஸ்டாலனின் சாதித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

1970 களில் ஒரு இளைஞன் மூன்று வாரங்களாக அழுக்கு ஜீன்ஸீம், டீசர்ட்டுமாக நியூஜெர்ஸி பேருந்து நிலையத்திலேயே சுற்றி திரிந்து இருக்கிறார். அப்பொழுது அங்கு நின்றிருந்த ஒருவர் அவரைப் பற்றி விசாரிக்க, “சார், நான் ஒரு சினிமா நடிகன். சின்ன சின்ன கேரக்டர் எல்லாம் பண்ணியிருக்கேன்.

ஹீரோவாகறதுதான் என்னுடைய லட்சியம்” என்று அந்த இளைஞன் சொல்ல இவர் “என்னப்பா நீ பேசும்போதே வாய் ஒரு பக்கம் கோணிக்குது ஒனக்கு… இந்த நிலைமையிலே ஹீரோவாகணும்னு பேராசைப்படறியே….” என்று கேட்டவுடன், ” இல்லே சார்…நா சமாளிச்சுருவேன்…எனக்கு நல்லா சண்டை செய்யத் தெரியும்… Action Hero-வா வரணும்னுதான் ஆசை… .சான்ஸ் கிடைச்சா ஜெயிச்சுருவேன்….” என்று அந்த இளைஞன் தன்னம்பிக்கையுடன் சொல்ல,இவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,”சரி சரி …. உன் லட்சியமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

உன்ன இப்படிப் பாக்க எனக்கு கஷ்டமாயிருக்கு… மொதல்ல வீடு போய் சேரு….செலவுக்கு கொஞ்சம் பணம் வச்சுக்கோ”, என்று சொல்லி 25 டாலர் பணத்தை அந்த பெரியவர் அந்த தன்னம்பிக்கை இளைஞனுக்கு கொடுக்கிறார்.

“நீங்க கொடுக்கற இந்தக் காசை நா சும்மா வாங்கிக்க மாட்டேன்…இந்த நாய் என் Friend மாதிரி….இதை ஒங்ககிட்டே ஒப்படைக்கறேன்… உங்க பணத்தை கொடுத்துட்டு என்னோட நாயை வாங்கிக்கறேன்….”,என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறான் அந்த இளைஞன்.

இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நியூயார்க்கிற்கு சென்று வாய்ப்புகளைக் கேட்டு அலைந்ததன் பயனாக தோல்விகள் கிடைக்க, அதோட சேர்த்து அனுபவங்களும் கிடைத்ததில் ஒன்று தெளிவாக புரிந்தது, நம் தோற்றத்திற்கு சினிமாவில் Hero chance கண்டிப்பாக கிடைக்காது. அதனால், நமக்கேற்ற வகையில் நாமே ஒரு Script செய்ய வேண்டியதுதான் என முடிவு செய்கிறான். அப்படி உருவாக்கும் Script-யை எந்த தயாரிப்பாளரும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறான்.

இவ்வாறு தரமாக ஒரு ஸ்கிரிப்டை தயாரித்த அந்த இளைஞன் தான் சில்வஸ்டர் ஸ்டலோன். அவர் எழுதிய அந்த திரைக்கதையை படிக்க படிக்க அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது.மீண்டும் சினிமா அலுவலகங்களுக்கு படையெடுக்கிறார். அப்போ,நடிக்க சான்ஸ் கேட்டு மட்டும் போனார்.இந்தத் தடவை Story cum Hero என்கிற கோரிக்கையோடு தன்னம்பிக்கையோடு இறங்குகிறார்.

முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை

ஒரு தயாரிப்பாளருக்கு இவர் எழுதிய கதை மிகவும் பிடித்து விட, கதையை மட்டும் கொடுத்து விடும்படியும், வேறு யாராவது பிரபல Hero-வை வைத்து படமெடுத்துக் கொள்கிறேன் என்றும் கதைக்கு மட்டும் 1,25,000 டாலர் கொடுப்பதாகவும் சொல்கிறார்.

“இல்லே சார்….எனக்காகவே எழுதிய கதை….நா நடிச்சாதான் சரியா வரும்…ஒவ்வொரு காட்சியையும் எப்படி நடிக்கணும்கிற அளவுக்கு பயிற்சி எடுத்து இருக்கேன்….மன்னிச்சுக்குங்க சார்….”,என்று சொல்லி விட்டு நடையைக் கட்டியுள்ளார்.

தயாரிப்பாளருக்கோ அந்தக் கதையை விட மனசுல்லாமல் தூது அனுப்புகிறார். கதைக்கு மட்டும் 3,20,000 டாலர் குடுக்கறேன்.. என்று அந்தத் தயாரிப்பாளரும் அந்தக் கதையை விட மனசில்லாமல் கேட்க, ஸ்டலோன் மிகப்பிடிவாதமாக, “சார்…மறுபடியும் சொல்றேன்… என்னையை தப்பா நினைக்காதீங்க…இந்தக் கதைக்கு ஹீரோவா எனக்கு வாய்ப்பு கிடைக்கலன்னா, இந்தக் கதையைவே கிழிஞ்சு எறிஞ்சுருவேன்…”, என்று சொன்னவுடன் தயாரிப்பாளர் ஸ்டோலனைஅதிர்ச்சியோடு பார்க்கிறார். பின் ஒருவழியாக சம்மதித்து திரைப்படம் எடுக்க தயாராகிறார்.

இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?

ஆனால், ஸ்டலோனுக்கு Hero Chance கொடுப்பதால் கதையோடு சேர்த்து வெறும் 35,000 டாலர்தான் சம்பளம். இப்படித்தான் ராக்கி என்ற ஹாலிவுட் படம் உருவானது. தயாரிப்பாளர் கொடுத்த 35,000 டாலர் தனது கைக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம், தனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த அந்த பெரியவரை சந்தித்து வட்டியும் முதலுமாக 15,000டாலரை கொடுத்து தனது நண்பனான நாயை மீட்டுக் கொண்டு வருகிறார். தன்னுடைய நாயையும் செண்டிமென்ட்டாக நடிக்க வைக்கிறார்.

ஸ்டலோனின் மீது நம்பிக்கையில்லாமல் மிகக்குறைந்த பட்ஜெட்டையே ஒதுக்குகிறார், தயாரிப்பாளர். படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒரு மில்லியன் டாலர்தான். நம் இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய். இப்படி கடும்போராட்டத்திற்கு இடையில் எடுக்கப்பட்ட ராக்கி  மாபெரும் வெற்றி அடைகிறது. படத்தின் பட்ஜட்டோ ஒரு மில்லியன் டாலர்தான். ஆனால் 1976-ல் அதிக வசூல் சாதனை புரிந்த திரைப்படமும் ராக்கிதான். பத்துப் பிரிவுகளில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று பிரிவுகளில் விருதுகளையும் பெற்றுள்ளது.

ராக்கி என்ற அந்த ஒரே படத்தின் மூலம் ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஆனார், சில்வர்ஸ்டர் ஸ்டாலோன். படம் வெளியாகி 48 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ‘ராக்கிக்கு’ மவுசு குறையவேயில்லை. இவ்வாறு தன் மேல் வைத்திருந்த அபார நம்பிக்கையால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் ஹாலிவுட்டின் சூப்பர் இப்படித்தான் உருவெடுத்தார் சில்வஸ்டர் ஸ்டோலன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.