கமல் – சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்.. வெளியான கிளைமாக்ஸ் காட்சி விபரம்! தியேட்டர்ல கதறி அழ போறாங்க

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

“டான்” படத்தின் வெற்றிக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு (அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி) வெளியானது . ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

WhatsApp Image 2023 06 16 at 1.03.05 PM 1

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் ‘மண்டேலா’ படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர்.

WhatsApp Image 2023 06 16 at 1.03.04 PM 1

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி மாவீரன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரன் படத்திற்கு தெலுங்கில் ‘மஹாவீருடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

மாவீரன் படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 06 16 at 1.03.04 PM

சில காரணங்களால் காஷ்மீர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படம் ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் மரணிப்பது போல கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...