கமல் வீட்டு மொட்டை மாடியில் தயாரான கதை.. உதவி இயக்குனராகவும் கமல்.. ஆனால் மோசமான விமர்சனங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு கதையை தேர்வு செய்து, அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். அந்த படம்தான் ஆர்.சி.சக்தி இயக்கிய ‘உணர்ச்சிகள்’. இந்த படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

ஆர்.சி.சக்தி மற்றும் கமல்ஹாசன் இருவருமே பல ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களுக்காக இருந்தார்கள். கமல்ஹாசன் பரமக்குடி என்றால் ஆர்.சி.சக்தி இளையான்குடி என்பதால் இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்கள் என்ற நட்பும் இருந்தது.

எஸ்பி முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா.. டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன்.. என்ன படம் தெரியுமா?

இருவரும் விடிய விடிய சினிமா பத்தி பேசுவார்கள். கதை டிஸ்கர்ஷனில் ஈடுபடுவார்கள். கமல்ஹாசனின் எல்டாம்ஸ் வீட்டின் மொட்டை மாடியில்தான் பல கதைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அப்படி உருவான ஒரு கதைதான் ‘உணர்ச்சிகள்’ என்ற படம்.

இந்த படம் கடந்த 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், காஞ்சனா, ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் கதை என்று பார்த்தால் கிராமத்தில் வேலை செய்யும் 18 வயது கமல், தனது வீட்டின் உரிமையாளரின் சகோதரியால் பாலியல் துன்புறுத்தப்படுவார். விதவையான அந்த பெண் தனது உடல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக 18 வயது கமல்ஹாசனை பயன்படுத்தி கொள்வார்.

unarchigal 2

இதை தற்செயலாக அந்த பெண்ணின் சகோதரர் பார்த்துவிட அவர் கமல்ஹாசனை அடித்து துரத்திவிடுவார். இதனை அடுத்து கமல் சென்னை செல்கிறார். சென்னையிலும் அவருக்கு பாலியல் ரீதியாக துன்பம் ஏற்படுகிறது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில்தான் மரகதம் என்ற விபச்சாரியை சந்திக்கிறார். அவர் கமல்ஹாசனை ஆதரித்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தான் திடீரென கமல்ஹாசனுக்கு பாலியல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி இறந்து விடுவது போன்ற கதை முடிந்திருக்கும்.

ஒரு சில தவறான பெண்களின் உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு தன்னுடைய உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி சீரழிந்தது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் இந்த படத்தில் ஆர்.சி.சக்தி செதுக்கியிருப்பார்.

unarchigal 1

கமல், ஆர்.சி.சக்தி இருவருமே சேர்ந்து உருவாக்கிய இந்த கதையில் கமல்ஹாசன் திரைக்கதை, வசனத்திலும் உதவினார். மேலும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். ஆனால் இந்த படம் வெளியானபோது நம்முடைய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இந்த கதை இருப்பதாக பல ஊடகங்கள் விமர்சனம் செய்தன.

உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை சொல்வதற்காக படம் முழுவதும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள்தான் அதிகம் இருந்தது என்றும் விமர்சனம் எழுந்தன.

சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம்.. விவியன் ரிச்சர்ட்ஸ் கெட்டப்.. கமல்ஹாசனின் ‘சத்யா’ உருவான கதை..!

ஆர்.சி.சக்திக்கு இதுதான் முதல் படம் என்றாலும், இந்த படம் தோல்வியடைந்தாலும் இதனை அடுத்து ‘மனிதர்களில் இத்தனை நிறங்களா?’, ‘தர்மயுத்தம்’, ‘சிறை’ உள்பட ஒரு சில படங்களை இயக்கி தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொண்டார். இருப்பினும் அவருக்கு முதல் படம் மிகப்பெரிய தோல்வி படமாகவும் நெகட்டிவ் விமர்சனம் கிடைத்த படமாகவும் அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...