கமல்ஹாசனின் 234வது படத்தின் டைட்டில் டீசரில் இப்படி ஒரு பாரதியார் கவிதையா? அது என்ன கவிதை தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நாளை மிகச் சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்கு பின் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து தனது 234வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் மற்றும் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர், திரிஷா, அபிராமி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவின் கிலிம்ஸ் இன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவின் தொடக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் என டைட்டில் கார்டு போடப்பட்டு அதன் பின் லீடர் என்னும் தலைப்பின் கீழ் கமல்ஹாசனின் புகைப்படமும், ஐகான் என குறிப்பிட்டு மணிரத்தினத்தின் புகைப்படம் அதன் பின் இந்த படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் புகைப்படம் என அடுத்தடுத்து இந்த படத்தின் டெக்னீசியன் அவர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டது. அதை எடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பேக் சாட் ஒன்று காட்டப்படுகிறது. அதன் பின் அவர் கையில் ஒரு கூர்மையான வால் போன்ற ஒரு ஆயுதமும் அதில் சிறு ரத்த துளிகள் இருப்பது போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த படம் குறித்த ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கண்கள் மட்டும் தெரியும் படி வெறித்தனமான லுக்கில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரின் பின்புறம் சில தமிழ் கவிதைகள் மிரர் ஆங்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த கவிதைகள் மகாகவி பாரதியாரின் காலனுக்கு உரைத்தல் அதாவது எமதர்மராஜாவிற்கு கூறுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;
என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!
வேலாயுத விருதினை மனதில்
மதிக்கிறேன். என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை
எண்ணி துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக்
காக்கவே – நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ
கெட்ட, மூடனே? அட (காலா) என்னும் பாரதியார் கவிதைகள் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது மேலும் அதில் இருக்கும் கையெழுத்துக்களை பார்க்கும் பொழுது இது கமலின் கையெழுத்தாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

18 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படத்தின் இயக்குநரை சமீபத்தில் பாராட்டிய விஜய்!

இந்த கவிதையை பார்க்கும் பொழுது எமனுக்கும் பயப்படாத உயிரை துச்சமாக நினைக்கும் சுத்தமான ஒரு வீரனின் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல உள்ளது. மேலும் இதே மாதிரியான போஸ்டர் தான் மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்திலும் இடம் பெற்றிருந்தது. மேலும் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் போஸ்டர் வெளியிடும் இதே போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Velmurugan

Recent Posts