அடுத்தடுத்து கமல் பட அப்டேட்கள் சும்மா அள்ளுதே!.. எல்லாமே நாயகன் பிறந்தநாளை முன்னிட்டுத்தான்!..

1987 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் 35 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவித்தனர்.

மணிரத்னம் மாபெரும் வரலாறு படைத்த சோழரின் தஞ்சையை பற்றிய கதையான பொன்னியின் செல்வன் வெற்றியிலும், கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியிலும் மூழ்கி இருந்தன. பொன்னியின் செல்வன் இரண்டு படங்களுமே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்துவிட்டன.

கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் தயாராகி வருகின்றன. இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துவிட்ட கமல், அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் KH 233 படத்தை H வினோத்தும், KH 234 படத்தை மணிரத்னமும் இயக்குகின்றனர். இதனால் கமல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்புடன் இருக்கின்றனர். இது கமலின் 234வது படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக KH 234 என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் அதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த திரைப்படத்தில் தற்போது ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். மணிரத்னம் ரவி கே. சந்திரன் இருவரும் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்கள் பிறகு மீண்டும் இணையவுள்ளர்.

KH 234 டீசர் ரெடியாகுது

கடந்தாண்டே KH 234 அஃபிஸியல் அப்டேட் வெளியானாலும், ஷூட்டிங் இதுவரை தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு KH 234 டீசரை வெளியிட்டு, படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 6ம் தேதி KH 234 டீசர் வெளியாகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து KH 234 திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது.
நடிகர் கமல் நடிகும் KH 234 படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குனராக அன்பறிவ் இணைந்துள்ளனர். கேஜிஎஃப், விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் மூலம் ஆக்ஷன் ஹிட் கொடுத்த இந்த இரட்டையர்கள், முதன்முறையாக மணிரத்னம் உடன் இணைந்துள்ளனர். இந்த டீசர் பயங்கர ஆக்ஷன் மோடில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது..

இந்நிலையில், இந்த டீசர் ஷூட்டிங் ஸ்பாட் புகைபடங்கள் வைரலாகி வருகின்றது. படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அது தூண்டியுள்ளது. அதில், அன்பறிவ் மாஸ்டர்கள் இருவரும் இயக்குனர் மணிரத்னத்துடன் டிஸ்கஷன் செய்வது போல் உள்ள நிலையில், தாறுமாறான ஆக்‌ஷன் இருப்பது உறுதி.

இந்தியன் 2 இன்ட்ரோ, அடுத்தடுத்து கமல் படங்களின் அறிவிப்பு என நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் களைகட்ட உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.