கமல் சாரை மறக்க முடியாது- சுரேஷ்கிருஷ்ணா

இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சிந்து பைரவி உட்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர். இவரின் பழைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்,


இயக்குனர் பாலச்சந்தரின் ஏக் துஜே கேலியே படத்துக்கு நன்றாக இந்தி தெரிந்த நபர் உதவியாளரா வேணும்னு என் நண்பர் சொன்னத கேட்டு இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளரா சேர்ந்தேன். கமல் சார் அப்போ இருந்தே பெரிய ஆர்ட்டிஸ்ட்தான் , கமல் சாருக்கு ஹிந்தி கற்று கொடுக்க போக அவருக்கும் எனக்குமான நட்பு வளர்ந்தது.

பின்பு கமல் சார் மூலம் கிடைத்த வாய்ப்புதான் சத்யா திரைப்படம் அந்த திரைப்படம் என்னை இயக்குனராக அடையாளம் காட்டியது அதனால் கமல் சாரை மறக்க முடியாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

சத்யா படத்துக்கு பிறகுதான் அண்ணாமலை, பாட்ஷா, வீரா என சூப்பர்ஹிட் படங்கள் பலவற்றை இயக்கி முன்னணி இயக்குனரானார் சுரேஷ் கிருஷ்ணா.

Published by
Staff

Recent Posts