கடகம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கடக ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 8 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். 8 ஆம் இடத்து அதிபதி 8 ஆம் இடத்திற்கு வருவது யோகத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வெளியூர்ப் பயணங்கள், தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும்போது எச்சரிக்கையாகச் செயல்படுதல் வேண்டும்.

இரவு நேரப் பயணங்களை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்து சனி ஏற்படுகையில் உடல் ஆரோக்கியம் ரீதியாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

கோபம், எரிச்சல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும். தினசரி என்ற அளவில் யோகா மற்றும் தியானம் செய்து வாருங்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றத்தினைப் பார்ப்பீர்கள். சுப காரியம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து இழுபறி நீடித்து இருந்திருக்கும். தற்போது அவை அனைத்தும் சரியாகும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும், பொருளாதாரரீதியாக பணவரவு சிறப்பாகவே இருக்கும். வாக்குக் கொடுக்கும் போது மட்டும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாக்குக் கொடுப்பது நன்மை பயக்கும்.

இடமாற்றம், தொழில் மாற்றம் என்பது போன்ற மாற்றங்களை வரவேற்கத் தயாராக இருங்கள். குருவின் பார்வையால் சத்ரு நிவர்த்தியானது ஏற்படும். அதிர்ஷ்ட அமைப்பு ஏற்படும்.

குடும்பத்தில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் விலகி சந்தோஷம் ஏற்படும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் கை, கால்களை அலசிவிட்டு வாருங்கள்.

அஷ்டமச் சனி காலம் என்பதால் யாருக்கும் அறிவுரை கூற வேண்டாம்; யாருடைய சொந்த விஷயத்திலும் தலையீடு செய்யாதீர்கள். வேலைவாய்ப்பு ரீதியாக பல மாற்றங்களைத் தைரியத்துடன் செய்வீர்கள்; சோம்பலுக்கு மட்டும் ஆட்படாதீர்கள்.

தேவையற்ற பேச்சு உங்களை பல பிரச்சினைகளில் மாட்டிவிடும், தேவையற்ற சட்டம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.