காதலர் தினம் படத்தின் ஹீரோயினுக்கு இப்படி ஒரு நிலைமையா? வாழ்க்கையின் மறுபக்கம்!

தமிழில் 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காதலர் தினம். இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர். காதலர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய காதலர் தினம் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் காதலர் தினம் படத்தில் நடித்த குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகி இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது இந்த படத்தின் மூலம் தான். பின்னர் பாலிவுட் சினிமா பக்கம் சென்ற சோனாலி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார், ஆனால் அதன் பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை.

அந்த படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் குணாலுக்கு ஜோடியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சோனாலி. இந்நிலையில் சோனாலியின் நிஜ வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

சோனாலியின் நிஜ வாழ்க்கையை பார்க்கும் போது வலியும், சோகமும் மட்டும் இல்லாமல் தன்னம்பிக்கையும், புது தைரியமும் கிடைக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சையாலும், மன தைரியத்தாலும் மீண்டுள்ளார். தற்பொழுது புற்றுநோயில் இருந்து மீண்டு நம்பிக்கை தரும் வகையில் வாழும் சோனாலி பிந்த்ரே அவர் நோயில் இருந்து மீண்டது குறித்து ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான உடனே அவரை மருத்துவர் மிக விரைவில் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த அளவிற்கு நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததாகவும் கூறினார். மருத்துவர் கூறிய வார்த்தைக்கு இணங்க அவரும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அதன் பின் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் நடந்தது, ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு பின் இன்னும் 24 மணி நேரத்திற்குள் தன்னை எழுந்து நடக்குமாறு மருத்துவர்கள் கூறினார், நானும் மிகவும் கடினப்பட்டு நடந்ததாக கூறினார். அடிமேல் அடி வைத்து நடக்க பழகும் போது என் உடலில் 23 முதல் 24 இன்ச் வரை அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடைய தழும்புகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகைகள்!

ஆனால் அன்றைக்கு நம்பிக்கையோடு நடந்து இன்றைக்கு இவ்வளவு தூரம் பயணிக்கிறேன். எப்போதுமே வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவும், எந்த ஒரு நெகட்டிவ் எண்ணங்களும் நம்ம மனதில் இருக்கவே கூடாது. இன்றைக்கு இன்டர்நெட் காலத்தில் எல்லாமே நம் கையில் கிடைக்கிறது.

வெளியிலிருந்து பார்க்கும்போது இது பெரிய விஷயமாக தெரியவில்லை என்றாலும், ஆனால் உண்மையில் சமூக வலைதள விஷயங்கள் நெகட்டிவாக மாறிவிடும் பயம் உள்ளது. அதனால் உங்களை சுற்றி என்ன நடக்குது என்பதை நீங்க உணர்ந்து செயல்பட வேண்டும். வேறு யாரோ இன்டர்நெட்டில் சொல்லும் கருத்துக்கள் உங்க எண்ணங்களை தீர்மானிக்காத வகையில் பாத்துக்கொள்ளுங்கள் என ஒரு தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை விதைத்து உள்ளார் சோனாலி.

Published by
Velmurugan

Recent Posts