முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகைகள்!

தென்னிந்திய சினிமாவில் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களின் கண்ணை கவரும் அழகு, துள்ளலான நடனம், குழந்தைத் தனமான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகின்றனர்.

திரைத்துறையில் பல நடிகைகள் அடுத்தடுத்து வந்தாலும் தனது திறமையான நடிப்பால் மட்டும் தான் நடிகைகள் பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்க முடிகிறது.

அந்த வகையில் நடித்த முதல் படத்திலே மக்கள் மனதை கொள்ளை கொண்ட சில முன்னணி கதாநாயகிகளை பற்றி இருந்த தொகுப்பில் பார்க்கலாம்…

1. கிரண்

கிரண் 2002 ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கலாபவண் மணி , மனோரமா , வையாபுரி என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து தென்னவன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய், அஜித், கமல், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

2. ரீமாசென்

இவர் 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார். மேலும் அவருக்கும் இது தான் முதல் படம். காதலை மையமாக கொண்ட படம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த ஒவ்வொரு பாடலையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து வல்லவன், விஷாலுடன் திமிரு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.

3.நயன்தாரா

இவர் தமிழில் சரத்குமாருடன் இணைந்து ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து அடுத்த படத்திலே அவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், ஜெயம்ரவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

லியோ படத்தில் இத்தனை பிரபலங்களா.. படத்தில் கேமியோ ரோல் தான் விஜய்க்கா?

4. மீரா ஜாஸ்மின்

இவர் மாதவனுடன் ரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விஷால் நடிப்பில் சண்டை கோழி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். மேலும் நடிகர் விஷாலுக்கும் இது தான் முதல் படம். அதை தொடர்ந்து விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

5. ரித்திகா சிங்

இவர் மாதவனுடன் இணைந்து இறுதி சுற்று படத்தில் நடித்துள்ளார். இவர் முதல் படம் என்பது போல இல்லாமல் மிகத்திறமையாக நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். அதை தொடர்ந்து இவர் விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸ்வுடன் இணைந்து சிவலிங்கா, ஓ மை கடவுளே என பல படங்களில் நடித்துள்ளார்.

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...