நாளை காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

நாளை தமிழக முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என வரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை காணும் பொங்கல் விஷேசமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை அடுத்து காணும் பொங்கல் தினத்தில் சென்னை மெரினா உள்பட முக்கிய பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருவார்கள் என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும்போது, வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை – முத்துசாமி பாயினட் – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை பெரியார் சிலை – அண்ணாசிலை – வெல்லிங்டன் பாயின்ட் – ஸ்பென்சர் சந்திப்பு – பட்டுளாஸ் சாலை – மணி கூண்டு – GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

* அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

* மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது

* பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews