இறந்த பின் பேரறிஞர் அண்ணாவை நடிக்க வைத்த கே.பாலசந்தர்.. விவாகரத்தான கணவன் – மனைவி கதை..!

கடந்த 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா காலமானார். ஆனால் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியான கே.பாலச்சந்தரின் ‘இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் அண்ணாவின் கேரக்டர் ஒன்றை கே.பாலசந்தர் நடிக்க வைத்தார்.

சிறுவயதிலிருந்தே அண்ணாவின் மீது பற்று கொண்ட கே.பாலச்சந்தர் இந்த படத்தின் கதைப்படி முதலமைச்சரை கலெக்டர் சந்திக்கும் காட்சி ஒன்று வரும். அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தபோதிலும் அண்ணாவைத்தான் முதலமைச்சராக கே.பாலசந்தர் காண்பித்தார்.

4 தேசிய விருதுகள்.. இளையராஜா – கே.பாலசந்தர் கூட்டணி.. சித்ராவின் அறிமுகம்.. பல அற்புதங்கள் செய்த சிந்து பைரவி..!

பாலச்சந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் விவாகரத்தான கணவன் மனைவி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய கதையம்சம் கொண்டது.

irukodugal1

ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி ஆகிய இருவரும் தம்பதிகளாக இருந்து விவாகரத்து பெற்று இருப்பார்கள். அதன் பிறகு சௌகார் ஜானகி மேல்படிப்பு படிக்க சென்று விடுவார். பல வருடங்கள் கழித்து ஜெமினி கணேசன் கலெக்டர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதே அலுவலகத்தில் கலெக்டராக செளகார் ஜானகி வருவார். இருவரது சந்திப்புகள், அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் என்ன என்பது தான் இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

இந்த நிலையில் ஜெமினி கணேசனுக்கு ஜெயந்தியுடன் இரண்டாவது திருமணம் நடந்திருக்கும். ஜெயந்தி, சௌகார் ஜானகி சந்திப்பு என திரைக்கதை விறுவிறுப்பாக செல்லும். தமிழ் சினிமாவின் வழக்கத்தின்படியே இந்த படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கும்.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

இந்த படத்தின் கிளைமாக்ஸ் முந்தைய காட்சியில் கொள்ளைக்காரர்களை சுட்டு பிடிக்க வேண்டிய ஒரு நிலை வரும். அப்போது கலெக்டர் செளகார் ஜானகி, முதலமைச்சரை சந்தித்து அனுமதி கேட்பதற்காக சென்று இருப்பார். இந்த படம் வெளியான காலத்தில் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தாலும் அண்ணாதுரை மீது இருந்த பற்று காரணமாக அண்ணாவையே முதலமைச்சராக இந்த படத்தில் கே.பாலசந்தர் பயன்படுத்திருப்பார்.

irukodugal2

அண்ணாதுரை கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று பாலச்சந்தர் பலமுறை யோசித்த போதிலும் சரியான நபர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அண்ணாவாக எந்த ஒரு நபரையும் காண்பிக்காமல் அவருடைய கண்ணாடியை மட்டும் மேஜையில் இருக்கும்படி காண்பித்து, முதலமைச்சர் நாற்காலியை மட்டும் காண்பித்து, பின்னணி குரலில் அண்ணா பேசுவது போல் படமாக்கி இருப்பார். இந்த காட்சி அன்றைய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!

இந்த படம் 1969ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு வி.குமார் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக நான் ஒரு குமாஸ்தா, புன்னகை மன்னன், கவிதை எழுதிய ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews