உன்னை செருப்பாலயே அடிப்பேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி வந்த கோலம்.. கோபத்தில் கொப்பளித்த பாலச்சந்தர்..

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இரண்டு பேர் முன்னணி நாயகர்களாக உருவாகி இன்று இந்தியாவை தாண்டி சர்வதேச முகமாக இருப்பதற்கு காரணமானவர் தான் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ், சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்க, அவரது ஸ்டைலை பார்த்து கவரப்பட்டார் இயக்குனர் பாலச்சந்தர்.

இதனைத் தொடர்ந்து, அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் கமலுடன் இணைந்து நடித்து நடிகராகவும் அறிமுகமானார் சூப்பர்ஸ்டார். சிவாஜி ராவ் என இருந்தவரை சினிமாவுக்காக ரஜினி என பெயர் மாற்றி இன்று இந்திய சினிமாவின் அடையாளமாகவும் அந்த பெயர் மாறி விட்டது.

அபூர்வ ராகங்கள் படத்தை தொடர்ந்து, அந்த காலத்தில் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த ரஜினிகாந்த், கமலுடன் இணைந்தும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிறகு கமர்சியல் திரைப்படங்களில் தனது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் இருக்கும் பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்து வந்தாலும், இன்னொரு பக்கம் தனது நடிப்பால் மிரட்டிய பல திரைப்படங்களிலும் முத்திரை பதித்திருந்தார்.

தளபதி, முள்ளும் மலரும், காலா என பல திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம், கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய, அடுத்து வேட்டையன் திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே, பாலச்சந்தர் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை செருப்பை கழற்றி அடித்து விடுவேன் என கோபத்துடன் சொன்ன சம்பவத்தின் பின்னணி பற்றி ரஜினி பல ஆண்டுகளுக்கு முன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரஜினி தெரிவித்த கருத்தின்படி பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்த போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு ரஜினி திரும்பி இருந்த நிலையில் அங்கிருந்து போன் செய்து ஒரு காட்சி எடுக்க பாலச்சந்தர் மறந்துவிட்டதாக அதனை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதால் உடனடியாக சூட்டிங் ஸ்பாட் வரவேண்டும் என்றும் ரஜினியிடம் தெரிவித்திருந்தனர்.

அப்படி சொன்னதும் ஒரு நிமிடம் ரஜினி ஆடிப் போனார். இதற்கு காரணம் அவர் அந்த நேரத்தில் மது அருந்தி இருந்தது தான். இதனால் வாய் எல்லாம் நன்றாக கழுவி, ஸ்பிரே அடித்து விட்டு மேக்கப் செய்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றுவிட்டார். மேலும் பாலச்சந்தர் அருகில் சென்று விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தும் அவருக்கு ரஜினி மது அருந்தி இருந்தது தெரிந்துவிட்டது.

உடனடியாக தனது ரூமிற்கு அழைத்து பேசிய பாலச்சந்தர், “நடிகர் நாகேஷ் தெரியுமா. அவனுடைய நடிப்பு திறனுக்கு முன்பு நீ எல்லாம் ஒரு இரும்புக்கு சமம். அப்படி இருந்தும் அவன் மது பழக்கத்தின் காரணமாக தனது வாழ்க்கையை வேஸ்ட் செய்து விட்டான். இனிமேல் நீ சூட்டிங் ஸ்பாட்டில் மது அருந்தி இருப்பது எனக்கு தெரிய வந்தால் செருப்பை கழட்டி அடிப்பேன்” என கண்டிக்கவும் அதன் பின்னர் இந்நாள் வரை எந்த சூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போட்டுக் கொண்டபடி இருந்தாலும் மது அருந்துவதை ரஜினி நிறுத்தி விட்டாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...