11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரத்தில் துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

11ஆம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடத்தனர்.

ஏராளமான மாணவர்கள் தாக்கல் செய்த இந்த மனு இன்று சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தண்டபாணி இந்த மனுக்களை விசாரணை செய்த போது ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு எழுத கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதி இல்லை என்று விதிகள் உள்ளதாக கேந்திரிய வித்யாலயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அது அவர்களுடைய எதிர்காலம் என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள கேந்திரியா வித்யாலாவில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தால் மூன்று வாரத்தில் துணை தேர்வு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews