அதிகாரியை அலறி ஓட விட்ட சோ. ராமசாமி.. ப்பா என்ன மூளைடா இது!

நடிகர் சோ. ராமசாமி பற்றி தெரியாத அரசில்வாதிகளே இருக்க முடியாது. சினிமா மட்டுமின்றி தனது திறமையான அரசியல் ஞானம் மற்றும் புத்திக் கூர்மையால் அரசியல்வாதிகளை அலற விடுவதில் கில்லாடி. துக்ளக் என்ற அரசியல் புலனாய்வு இதழ் மூலமாக பேனா என்னும் சாட்டையால் அரசியல் அரங்கையே தன் கட்டுப்பாட்டில் வைத்தருந்தவர். இவரது அரசியல் நையாண்டி எழுத்துக்களால் இதழியல் துறையில் தனி சாதனையாளராகத் திகழ்ந்தார்.

நாடகங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த சோ.ராமசாமி திரைத்துறையிலும் கால்பதித்தார். இவர் நடிப்பு மற்றும் துக்ளக் இதழ் துவங்குவதற்கு முன் அலுவலகம் ஒன்றில் பணியாற்றிபோது தனது புத்திக் கூர்மையால் எவ்வாறு அந்த நிறுவனத்தை நஷ்டத்தின் பிடியில் இருந்து மீட்டார் தெரியுமா?

அந்நிறுவனத்தின் பெரிய பதவியில் இருந்த ஒரு அதிகாரி செய்த தவறினால் பெரிய பண நஷ்டம் நிறுவனத்திற்கு. அதைப் பற்றி கேட்ட போது தான் ஒரு ஊழியர் தான் எனவும், தானாக எதுவும் முடிவு எடுக்கவில்லை என்றும், தவறு நடந்ததற்கு தான் பொறுப்பல்ல என்று கூறி ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார் அந்த அதிகாரி.

அந்தக் காலத்திலேயே சென்சாரில் ‘A‘ சர்டிபிகேட் வாங்கிய படம் இதுவா?

சோ இதை எப்படி கையாண்டார் என்றால் அவர் வகித்து வந்த அதே பதவிக்கு வேறு ஒரு நிறுவனம் விளம்பரம் செய்வதை போல ஒரு செட்டப் செய்தார். அதில் முக்கியமாக ஒரு அதிகாரிக்கு உண்டான அனுபவம் இருப்பது அவசியம் என்று விளம்பரப்படுத்தி இருந்தார்.

ராஜினாமா செய்த அந்த முன்னாள் அதிகாரியே மீண்டும் அதே பணிக்கு தனது முந்தைய அனுபவங்களுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். அதே அதிகாரி தான் பிரச்சினை என்று வந்தபோது தான் ஒரு சாதாரண ஊழியர் என்று வாதிட்டவர்.

சோ அந்த அதிகாரியின் அப்ளிக்கேஷன் ஃபார்ம் ஐ ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ஆக நீதி மன்றத்தில் சமர்ப்பித்து அந்த வழக்கை வென்று கொடுத்தார். வக்கீலாகவும் பணிபுரிந்த சோ.வுக்கு மூளை என்றால் அப்படி ஒரு மூளை! இதழியல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இவருக்கு வீரகேசரி, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews