அந்தக் காலத்திலேயே சென்சாரில் ‘A‘ சர்டிபிகேட் வாங்கிய படம் இதுவா?

தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக A சர்டிபிகேட் வாங்கிய படம் என்றால் அது புரட்சித்தலைவரின் எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி திரைப்படம். இப்படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் சண்டைக்காட்சிகள் அமைந்திருந்தால் தணிக்கையில ‘ஏ‘ சான்றிதழைப் பெற்றது. ஆனால் மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.

அதற்கு அடுத்ததாக டபுள் மீனிங் வசனங்கள் என்றால் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் இன்றும் ஞாபகத்திற்கு வருவார். இரட்டை அர்த்த வசனங்களால் காமெடியில் தனி டிரெண்டை உருவாக்கி இளசுகளை கலாய்த்த காமெடியன்.

இவர் அறிமுகமான வெண்ணிற ஆடை திரைப்படத்திற்கும் சென்சாரில் A சர்டிபிகேட் வழங்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி ஆகியோருக்கு இந்தப்படம் முதல் படமாக அமைய பின்னர் படத்தின் பெயரே ஜெயலலிதாவைத் தவிர மற்ற இருவருக்கும் அடைமொழிப் பெயராக அமைந்தது. ஸ்ரீதரின் இயக்கத்தில் முக்கோண காதல் கதையாக வரும் இந்தப்படம் சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்காக தணிக்கையில் ஏ சான்றிதழைப் பெற்றது.

Veeniara aadai Moorthy

அதன்பின் வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். இயல்பாகவே காமெடி காட்சிகளில் டபுள் மீனிங் வசனங்களைத் தெறிக்க விட தியேட்டரே வெட்கத்தில் குலுங்கி குலுங்கி சிரிக்கும்.

தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?

முதல் கலர்படம்

கருப்பு வெள்ளைப் படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் முதன் முதலாக வெளிவந்த வண்ணப்படம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும். ஆனால் இப்படம் கேவா கலரில் வெளிவந்ததால் அதற்கு முன்பே ட்ரு கலரில் ராஜயோகி என்ற படம் வெளியானது.  இதன் பின், “நம்மவீட்டு மஹாலட்சுமி”, “கணவனே கண்கண்டதெய்வம்” ஆகிய படங்களிலும், சில காட்சிகள் மட்டும் வண்ணத்தில் இடம்பெற்றன. கேவா கலரில் மூன்று நிறங்களிருக்கும்; ஆனால் ட்ரூ கலரில், ஒரே நிறம்தான் இருக்கும்.

அதற்கடுத்தாக மூழுநீள சினிமா ஸ்கோப் படம் என்றால் ராஜராஜ சோழன். அதுவரை திரைகளில் பாதியளவு மட்டுமே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ராஜராஜசோழன் முழு திரையையும் ஆக்கிரமித்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. அதன்பின் வந்த படங்கள் அனைத்தும் முழு நீள ஸ்கோப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...