பட்லர் சதமடிச்சு ஜெயிக்க வெச்சதை விடுங்க.. கடைசி 3 ஓவர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..

ஐபிஎல் தொடரில் தற்போது பட்லரின் சதம் பற்றியும் நிறைய சுனில் நரைன் சதமடித்தது பற்றியும் தான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பரவலாக பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் போட்டியாகவும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடி இருந்த போட்டி அமைந்திருந்த நிலையில் இதில் மிக சிறப்பாக நடந்த ஒரு அரிய சாதனையைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 223 ரன்களை எடுத்திருந்தது. நரைனின் சதம், ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி என அனைத்துமே கைகொடுக்க, நல்லதொரு சவாலான ஸ்கோரையும் கொல்கத்தா அணி எட்டி இருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அவுட்டாகாமல் களத்தில் நின்றிருந்தது ரசிகர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்திருந்தது. அதனை வீணடிக்காத பட்லர், சதமடித்து கடைசி பந்தில் தனது அணியை வெற்றி பெறவும் வைத்திருந்தார்.

அந்த வகையில் ஜோஸ் பட்லர் சதம் அடித்த சமயத்தில் நடந்த ஒரு அரிய சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் இழந்து தவித்த சமயத்தில் கடைசி மூன்று ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. 18 வது ஓவரில் முதல் பந்தை எதிர்கொண்டிருந்த பட்லர், 20 வது ஓவரின் கடைசி பந்து வரை மொத்தம் உள்ள 18 பந்துகளையும் எதிர்கொண்டு இருந்தார்.

அவருடன் பத்தாவது வீரராக உள்ளே வந்த ஆவேஷ் கான் ஒரு பந்தை கூட சந்திக்காமல் மறுமுனையில் நின்ற நிலையில் அனைத்து ஓவரிலும் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்திருந்தார் பட்லர். இதனால் 18 பந்துகளில் அவர் 40 ரன்கள் சேர்க்க, வைடு வழியில் ஆறு ரன்கள் வர வெற்றி இலக்கை கடைசி பந்தில் எட்டி அசத்தியிருந்தனர்.

இரண்டு விக்கெட்டுகள் கையில் இருந்த போதிலும் கடைசி பந்தில் சிறப்பாக சிங்கிள் கொடுத்து தான் பேட்டிங் சைடு நின்றாள் ஜெயிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் 18 பந்துகளையும் பட்லர் எதிர்கொண்டு ஆடி இருந்தது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...