ஜேஜேவில் அறிமுகம்.. கேஜிஎப் படத்தில் பின்னி பெடலெடுத்தவர்.. உடன் நடித்த நடிகரையே மணந்து கொண்ட நடிகை மாளவிகா..

சரண் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் உருவான ஜே ஜே திரைப்படம் பல இளசுகளின் மனதை கவர்ந்ததுடன் உன்னை நான், காதல் மழையே உள்ளிட்ட பாடல்களும் பல காதலர்களின் பிளே லிஸ்டில் இடம்பிடித்திருந்தது. அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி இருந்த திரைப்படம் ‘ஜே ஜே’. இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா அவிநாஷ். இவர் சமீபத்தில் வெளிவந்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் வரை பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்னட திரைப்படங்களில் அறிமுகமான அவர் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் தான் சரண் இயக்கத்தில் மாதவன், அமோகா, பூஜா நடித்த ’ஜேஜே’ என்ற திரைப்படத்தில் நாயகியின் சகோதரியாக அவர் நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து ஏராளமான படங்களில் அவருக்கு குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யா நடித்த ஆறு, ஜீவா நடித்த டிஷ்யூம் உள்பட பல படங்களில் நடித்தார். ஜெயங்கொண்டான், வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் நீதிபதி கேரக்டரில் நடித்திருப்பார்.

malavika1

மேலும் பூமராங், கைதி, ருத்ரதாண்டவம், வலிமை போன்ற தமிழ் படங்களில் நடித்த அவர் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டான ‘கேஜிஎப்’ படத்தில் நடித்தார். அந்த படத்தில் மாளவிகா அவினாஷின் கதாபாத்திரமும், நடிப்பும் அதிகம் பாராட்டுக்களை பெற்றிருந்ததுடன் இந்தியாவை தாண்டி அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்திருந்தது. அதேபோல் ‘கேஜிஎப்’ இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த அதே கேரக்டரில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் மாளவிகா அவினாஷ் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன சின்ன ஆசை’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர் ராஜ் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்கள் நடித்துள்ளார்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமே என்ற சீரியல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதே போல், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலிலும் சூப்பராக நடித்திருப்பார்.

malavika2

மேலும் அவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். கையில் ஒரு கோடி உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றிய அவர், பிக் பாஸ் கன்னடம், ஜோடி நம்பர் ஒன், ஜோடி நம்பர் 2 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். நடிகர் அவினாஷ் என்பவரை கடந்த 2001 ஆம் ஆண்டு மாளவிகா அவினாஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார். கன்னட நடிகரான அவினாஷும் திருமலை, என்னை அறிந்தால், சந்திரமுகி, ஏழாம் அறிவு, சர்தார் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.