ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க கூடாது.. கண்டிஷன் போட்ட எழுத்தாளர்.. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’..!

ஜெயகாந்தன் எழுதிய அக்னி பிரதேசம் என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு அவரே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவலைக் கொண்டு அவரே திரைக்கதை, வசனம் எழுத பீம்சிங் இயக்கத்தில் நாவலின் பெயரிலேயே திரைப்படம் உண்டானது.

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற இந்த திரைப்படத்தில் முதலில் முத்துராமன் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் நடிக்க விரும்பினர். ஆனால் இந்த கதையை எழுதிய ஜெயகாந்தன் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் மற்றும் லட்சுமி நடித்தால்தான் சரியாக இருக்கும் என்றும் ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்றும் கூறினார். வேறு வழியில்லாமல் இயக்குனர் பீம்சிங், ஸ்ரீகாந்த் மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் நடிக்க வைத்து இந்த படத்தை உருவாக்கினார்.

எஸ்பி முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா.. டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன்.. என்ன படம் தெரியுமா?

இந்த படம் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், ஜெயகாந்தனின் திரைக்கதை, வசனத்தில் மற்றும் பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகச் சிறந்த படமாக உருவாகியது. இந்த படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படியெல்லாம் நடக்குமா? ஒரு பெண்ணுக்கு அநீதி ஏற்பட்டால் இது எல்லாம் சாத்தியமா? என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்திருந்தது. அக்னி பிரவேசம் கதை என்னவெனில் ஒரு பெண் கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போது பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார். இதை தெரிந்து கொண்ட அவரது அம்மா, மகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடைய தலையில் தண்ணீர் ஊற்றி எல்லாம் சரியாகிவிட்டது, இனி உனக்கு ஒன்றுமே இல்லை என்று கூறுவார்.

இந்த சிறுகதையைத்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக சில ஆண்டுகள் கழித்து ஜெயகாந்தன் எழுதிய நிலையில் திரைப்படமாகவும் உருவானது. நாவலில் சொல்ல முடியாத சில விஷயங்களை அவர் திரைக்கதையில் சொல்லியிருந்தார். இந்த படத்தில் கங்கா என்ற கேரக்டராகவே லட்சுமி வாழ்ந்தார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

இந்த நிலையில் நாயகியின் நிலையை அறிந்த எழுத்தாளர் ஒருவர் அவரை திருமணம் செய்ய முன் வருவார். ஆனால் நாயகி இவ்வளவு நடந்த பின்னரும் திருமணம் நடந்தால் அதற்கு பெயர் திருமணமே இல்லை என்று கூறி கடைசி வரை திருமணமே செய்யாமல் இருந்து விடுவார் என்பதுடன் படம் முடியும். நாயகியாக லட்சுமி, எழுத்தாளராக ஸ்ரீகாந்த் ஆகிய இருவருமே அபாரமாக நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இரண்டே இரண்டு பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் கம்போஸ் செய்திருந்தார். அந்த இரண்டு பாடல்களையும் ஜெயகாந்தன் தான் எழுதியிருந்தார். ஆனால் பின்னணி இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பட்டையை கிளப்பியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது லட்சுமிக்கும் படக்குழுவினருக்கும் இடையே பிரச்சனை வந்ததாகவும் இதனை அடுத்து லட்சுமி இந்த படத்திற்கு டப்பிங் செய்ய முடியாது என்று கூறிவிட்டதாகவும், அதன் பிறகு வேறு ஒருவரை வைத்து டப்பிங் செய்யப்பட்டு இந்த படம் உருவானது என்றும் கூறப்பட்டது.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

முத்துராமன் மற்றும் ஜெயலலிதா நடிக்க விரும்பிய ஒரு படம் அவர்களால் நடிக்க முடியாமல் போனது குறித்து இருவருமே பெரும் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

Published by
Bala S

Recent Posts