6 நாளில் 600 கோடி வசூலை தாண்டிய ஜவான்.. இதெல்லாம் ஷாருக்கானுக்கு மட்டும் தான் சாத்தியம்!..

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இயக்குநர் அட்லீ 6 நாட்களில் ஷாருக்கானுக்கு 600 கோடி வசூலை ஈட்டி கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர்.

நடிகர் ஷாருக்கான் விக்ரம் ரத்தோர் எனும் அப்பா கதாபாத்திரத்திலும் ஆசாத் எனும் மகன் கதாபாத்திரம் என டபுள் ஆக்‌ஷனில் இந்த படத்தில் மிரட்டி இருந்தார். ஆக்‌ஷன், சென்டிமென்ட், எமோஷனல், மாஸ், ஏகப்பட்ட சோஷியல் மெசேஜ் மற்றும் பல தமிழ் சினிமா கதைகளையும் காட்சிகளையும் சுட்டு அழகான புதிய வகை பலகாரமாக பாலிவுட்டுக்கு ஜவான் எனும் பெயரில் அட்லீ சுட்ட சுவையான டிஷ்ஷை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை சாத்தியப்படுத்தி உள்ளனர்.

பதான் படத்தை தாண்டும்

தமிழ்நாட்டில் ஜவான் திரைப்படம் செல்ஃப் எடுக்காத நிலையில், வட இந்தியா மற்றும் ஓவர்சீஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் என்ன சாதனை நிகழ்த்தியதோ அதே அளவுக்கான வசூல் சாதனையை நடத்த பக்கா மார்க்கெட்டிங் செய்து ரெட் சில்லீஸ் நிறுவனத்தை நடத்தி வரும் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ஷாருக்கான் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்ததன் விளைவு தான் இப்படியொரு வசூல் வேட்டையை இந்த படம் செய்து வருவதற்கு காரணம் என்கின்றனர்.

6 நாளில் 600 கோடி

ஜவான் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 520 கோடி வசூல் ஈட்டிய நிலையில், 5வது நாள் அதிகாரப்பூர்வமாக 570 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், 6வது நாளில் 600 கோடி கிளப்பில் ஜவான் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடுமொத்தமாக 615 கோடி ரூபாயை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வசூல் செய்திருப்பதாகவும் வார நாட்களில் அந்த படத்தின் வசூல் கணிசமாக குறைந்து வரும் நிலையிலும், நல்ல லாபம் தான் ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்கின்றனர்.

பரிசுகள் காத்திருக்கு

இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையுடன் மீண்டும் படம் பிக்கப் ஆனால், அதிகப்படியான வசூல் வேட்டையை 2வது வார முடிவிலே ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் எடுத்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் படத்துக்கு வரிசையாக சன் பிக்சர்ஸ் சந்தோஷத்தில் உச்சத்தில் பரிசுகளை வாரி வழங்கியது போலவே ஜவான் படத்தின் தயாரிப்பாளரான ஷாருக்கான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் அட்லீ, நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகை பிரியாமணி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் வெயிட்டாக கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.