கவுண்டமணிக்கு மாற்றாக கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்..!

கடந்த 80கள் மற்றும் 90களில் கவுண்டமணி, செந்தில் மிகவும் பிசியான காமெடி நடிகர்களாக இருந்தனர். குறிப்பாக ரஜினி, கமல் படங்களில் அவர்கள் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சில சமயம் ரஜினி, கமலை கவுண்டமணி கிண்டல் செய்ததாகவும், இதனால் ரஜினி, கமல் இருவரும் இணைந்து கவுண்டமணிக்கு மாற்றாக ஒரு நடிகரை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து ஜனகராஜை வளர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ஜனகராஜ் சென்னையை சேர்ந்தவர். அவர் சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சினிமா சான்ஸ் கேட்டு பாரதிராஜாவிடம் அவர் அடிக்கடி சென்றதாகவும் அவரை பாக்யராஜ் பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

janagaraj3

இந்த படத்தில் ஒரு வயதான கேரக்டரில் ஜனகராஜ் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவரது கேரக்டர் மக்கள் மனதை போய் சேரவில்லை. இருந்தாலும் அதன் பிறகு ஜனகராஜுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பல படங்களில் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பாக்யராஜ் இயக்கி நடித்த சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தில் ஜனகராஜ்க்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தார். அந்த கேரக்டர் மூலம்தான் அவர் ரசிகர்கள் மனதில் இடம் பெற ஆரம்பித்தார்.

இந்த நிலையில் திடீரென ஜனகராஜுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது முகம் சற்று கோணலாகிவிட அவருடைய நண்பர்கள் மற்றும் சினிமா உலக வட்டாரங்கள் இனிமேல் நீ சினிமாவுக்கு லாயக்கில்லை, உன்னால் நடிக்கவே முடியாது என்று கூறினர். ஆனால் தன்னுடைய முகக்கோணலை அவர் சாதகமாக்கிக்கொண்டு வித்தியாசமான பாடி லாங்குவேஜ் செய்து நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல வாய்ப்புகளை பெற்றார்.

janagaraj2

கமல், ரஜினி படங்களில் ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஜனகராஜ் நடித்தார். ரஜினியின் பாயும் புலி, கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு, கமல்ஹாசனின் ஒரு கைதியின் டைரி, ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரா, கமல்ஹாசனின் உயர்ந்த உள்ளம், ரஜினியின் படிக்காதவன் என பல கமல், ரஜினி படங்களில் நடித்தார். கவுண்டமணிக்கு போட்டியாக கமல், ரஜினி ஆகிய இருவருமே சேர்ந்து ஜனகராஜூக்கு தங்கள் படங்களில் வாய்ப்புகள் கொடுத்து வளர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் இளையராஜா எந்த நடிகரையும் நெருங்க விட மாட்டார். ஆனால் இளையராஜாவிடம் நெருக்கமாக இருந்த ஒரே நடிகர் ஜனகராஜ்தான் என்று கூறப்படுவது உண்டு. ஏனெனில் ஜனகராஜ் மிக அபாரமாக வயலின் வாசிப்பார் என்றும் அவருடைய வயலின் திறமையை ஒருநாள் பார்த்த இளையராஜா அவரை அடிக்கடி பார்த்து பாராட்டுவதாகவும் கூறப்பட்டது.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தில் வயலின் வாசிப்பவராக ஜனகராஜை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இளையராஜா தான் பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் கே.பாலசந்தர் இந்த படம் குறித்த பேட்டியில் ‘நான் நாகேஷை மனதில் வைத்து தான் அந்த கேரக்டரை உருவாக்கினேன்’ என்றும் ‘ஒரு காலகட்டத்தில் நாகேஷ் குளிக்க கூட நேரமில்லாமல் காரிலேயே உடைமாற்றி கொண்டிருந்தார்’ என்றும் ‘அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்திருந்தேன்’ என்றும் கூறியிருந்தார்.

மேலும் இளையராஜா, ஜனகராஜ்க்கு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான தகவல். ரஜினிகாந்த் நடித்த சிவா திரைப்படத்தில் ஜனகராஜ் மற்றும் டிஸ்கோ சாந்தி பாடல் ஒன்று வரும். அந்த பாடலை இளையராஜா தான் பாடியிருந்தார். அந்த பாடல் சூப்பர் சூப்பர் ஹிட்டானது. வெள்ளிக்கிழமை தலமுழுகி’ என்ற இந்த பாடலை இளையராஜா மற்றும் சித்ரா பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

janagaraj

மேலும் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் ஜனகராஜ் நடித்த போலீஸ் கேரக்டரில் முதலில் கவுண்டமணிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கவுண்டமணி வேண்டாம், ஜனகராஜ் நடிக்கட்டும் என்று கமல்தான் ஜனகராஜை பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த படத்தில் ஜனகராஜ் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தில் ஜனகராஜ் நடித்தார். அதன் பிறகு தாதா 87 என்ற படத்தில் நடித்தார்.

மொத்தமே 12 படங்கள் தான்.. தமிழ் திரையுலகின் உதிராப்பூ ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன்..!

ஜனகராஜ் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா என்பதைப் பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...