விஜய் சேதுபதி போன்ற பக்குவமான மனிதனை பார்ப்பது கடினம்… சூரி புகழாரம்…

மதுரையில் பிறந்த நடிகர் சூரி ஒரு காமெடியனாக தனது பயணத்தை திரையுலகில் ஆரம்பித்து தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் நடிகராக உயர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அந்த காட்சியில் நடித்ததற்க்காக இவரை பரோட்டா சூரி என்றும் கூட மக்கள் அழைத்தனர்.

அதற்கடுத்து  ‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘பாண்டியநாடு’, ‘ஜில்லா’, ‘ரஜினி முருகன்’, ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’, ‘அரண்மனை’, ‘சீமராஜா’, ‘சங்கத்தமிழன்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்து தனது அபாரமான நடிப்புத் திறமையின் மூலம் மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் 2023 ஆம் ஆண்டு எழுதி இயக்கி வெளியிட்ட திரைப்படம் ‘விடுதலை பாகம் 1’. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியை கதாநாயகனாக அறிமுகபடுத்தியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். பீரியட் க்ரைம் திரில்லர் படமான ‘விடுதலை பாகம் 1’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பிஹேன்ட்வூட்ஸ் விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில் 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஹால் ஆப் ஃபேம் ஆக்டர்’ என்ற பிரிவில் நடிகர் சூரிக்கு விருது வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு மேடையில் பேசிய நடிகர் சூரி தனது சினிமா வாழ்க்கையைப் பற்றியும் விடுதலை படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். தன்னை கதாநாயகனாக அறிமுக படுத்தியதற்காக இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இயக்குனர் பாரதிராஜா அப்பாவின் கையால் இந்த விருதை பெற்றது எனது பாக்கியம் என்று கூறினார்.

பின்னர் நடிகர் விஜய் சேதுபதி பற்றி கூறுகையில், என்னை ஆரம்பகாலத்தில் இருந்தே நீ நடிகனா வரவேண்டியவன்டா, அதை நோக்கி பயணம் பண்ணு, விட்ராதடா அப்டினு நான் வெண்ணிலா கபடி குழு படம் நடிச்சதுல இருந்தே என்கிட்டே சொல்லுவார், அவ்வளவு மோட்டிவேட் பண்ணுவார், இப்போ கூட விடுதலை படத்திற்காக யாராவது அவரிடம் இன்டெர்வியூ கேட்டால் சூரியை கேளுங்க அவர்தான் ஹீரோ நான் சும்மா வில்லனாக தான் நடிச்சிருக்கேன் அப்படினு சொல்லுவார். இந்த மாதிரி பக்குவமான மனிதனை இந்த காலகட்டத்திலே பாக்குறது ரொம்ப கடினம் என்று நடிகர் விஜய் சேதுபதியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் சூரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...