‘கனா’ நாயகன் தர்ஷனுக்கு திருமணமா…? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…

‘கனா’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தர்ஷன். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவ்விரு திரைப்படங்களும் தர்ஷனுக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக ‘கனா’ திரைப்படத்தில் வரும் ‘ஒத்தையடி பாதையில’ பாட்டின் மூலம் பிரபலமானவர். இன்றளவும் அந்த பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம்.

அதற்குப் பின்பு 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த குக் வித் நிகழ்ச்சியின் மூலமாக தர்ஷனுக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.

தற்போது தர்ஷன் மற்றும் மலையாள நடிகையான அஞ்சு குரியன் ஆகிய இருவரும் மண கோலத்தில் இருப்பது போன்று புகைப்படங்கள் வெளியாயின. அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் தர்ஷன் பிரைவேட் ஆக திருமணம் செய்துக் கொண்டார் என்ற வதந்திகள் பரவி வந்தன.

இதையடுத்து தர்ஷன் ‘என்டே ஓமனே’ என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அதன் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த பாட்டின் ஷூட்டிங் தான் அது, தர்ஷனுக்கு திருமணம் ஆகவில்லை என்று புரிந்து கொண்டனர். இதனால் தர்ஷன் திருமணம் செய்துக் கொண்டார் என்ற வதந்தி முடிவுக்கு வந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...