அடர்ந்த காட்டில் சிக்கிய மாணவர்கள்.. ஐபோனில் சாட்டிலைட் மூலம் தொடர்பு கொண்ட ஆச்சரியம்..!

அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்ட மூன்று மாணவர்கள் ஐபோன் மூலம் சாட்டிலைட் தொடர்பு கொண்டு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அந்த மூன்று மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள யூட்டா என்ற வனப்பகுதிக்கு மூன்று மாணவர்கள் சென்ற நிலையில் அவர்கள் வழி தெரியாமல் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் ஆப்பிள் ஐபோன் வைத்திருந்ததை அடுத்து அந்த போன் மூலம் சேட்டிலைட் உள்ள எஸ்ஒஎஸ் தொடர்பு மூலம் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அந்த மூன்று மாணவர்களும் அதிரடியாக மீட்கப்பட்டனர்

யூட்டா என்ற பகுதிக்கு சென்ற அந்த மூன்று மாணவர்கள் எதிர்பாராத விதமாக வழி தெரியாமல் சிக்கிக்கொண்டனர். மேலும் அங்கு வெப்பநிலை குறைந்த காரணத்தால் மூன்று மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் மொபைல் போனில் நெட்வொர்க் இல்லாததால் தங்கள் பெற்றோர் உள்பட யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை இருந்துள்ளது

இந்த நிலையில் நல்ல வேலையாக மாணவர்களின் ஒருவர் ஐபோன் பயன்படுத்தி வந்ததை அடுத்து அவர் அந்த போனில் உள்ள சாட்டிலைட் துணை கொண்டு அவசர உதவி வேண்டும் என மீட்பு படையினருக்கு செய்தி அனுப்பினார். ஐபோனில் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை இல்லாத நேரத்தில் சாட்டிலைட் தொடர்பு கொண்டு அவசரகால எஸ்எம்எஸ் மட்டும் அனுப்பும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சத்தின் துணைகொண்டு அந்த மாணவர்கள் மீட்பு படையினரால் காப்பாற்றப்பட்டனர் என்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து சென்று மாணவர்களை காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே  ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் வாட்ச் ஆகியவை பல மனித உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று மாணவர்களையும் காப்பாற்றி உள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Bala S

Recent Posts