ஸ்ருதிஹாசன் உடன் செம ரொமான்ஸ்!.. கமலையே மிஞ்சிடுவாரு போல லோகேஷ் கனகராஜ்!..

கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையமைத்து உருவாக்கியுள்ள இனிமேல் ஆல்பம் பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்த படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்த நிலையில், லைக்கா மற்றும் கமல்ஹாசன் இடையே பிரச்சனை வெடித்தது.

ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் நெருக்கம்:

அதன் பின்னர் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரெட்ஜெயன்ட் நிறுவனம் லைகா உடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இந்தியன் 2 படத்தை தயாரித்து முடித்தது. இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

GJMoLY8WQAA0ZIG

இந்தியன் 2 திரைப்படம் தாமதமான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து விஸ்வரூபம் திரைப்படம் கூட கொடுக்காத ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கமல்ஹாசனுக்கு தந்தது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் மகளுடன் இணைந்து நடித்துள்ள வீடியோ ஆல்பம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகிறது. அந்த வீடியோ ஆல்பத்தின் டீசர் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ருதிஹாசனுடன் இணைந்து படு ரொமான்டிக்காக லோகேஷ் கனகராஜா இப்படி என்ன ரசிகர்கள் வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சில நொடி டீசரிலேயே பல வில்லங்கமான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கிள்ளி பார்க்க வைத்துள்ளது.

shruti

வெளியானது இனிமேல் டீசர்:

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கினார். மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு மட்டும் விஜய்க்கு ஹீரோயினை வைத்தாலும் பெரிதாக ரொமான்ஸ் சீன்கள் இல்லை. லியோவில் அந்த லிப் லாக் சீன் கூட தனது மனைவியை ஏமாற்றும் காட்சியாக இடம்பெற்று இருக்கும்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் படு நெருக்கமாக ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இப்படி ஒரு ஆல்பம் பாடலில் நடித்ததைப் பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை சோசியல் மீடியாவில் போட்டு வருகின்றனர்.

தனுஷுடன் இணைந்து 3 படத்தில் ஸ்ருதிஹாசன் ரொம்பவே நெருக்கமாக நடித்திருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவரை இப்படி பார்க்கிறோம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபாஸ் உடன் இணைந்து நடித்த சலார் படத்தில் கூட ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ரொமான்ஸ் காட்சிகள் இல்லையே என்றும் லோகேஷ் கனகராஜ் உடன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட் ஆகிவிட்டதா என்றும் கேட்டு வருகின்றனர். மார்ச் 25ம் தேதி வெளியாகும் வீடியோ பாடலில் இன்னும் என்னவெல்லாம் இருக்குமா என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.