பொங்கல் போட்டியில் இணைகிறதா இந்தியன் 2.. ரஜினி vs கமல் கிளாஷ் இருக்குமா.. என்ன விஷயம்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் ரிலீசாகும் என தெரிகிறது. அந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளதாக இயக்குனர் சங்கர் அதிகாரபூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியன் படம் கமல்ஹாசனுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஊழலுக்கு எதிரான படமாக சாட்டையை சுழற்றி இருந்தது அந்த படம்.

இந்தியன் 2 கதை இதுதானா:

அந்த படத்தின் கிளைமாக்ஸில் தனது மகனே தப்பு செய்திருந்தாலும் கொல்வேன் என சந்துரு கமலை கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது போல கிளைமாக்ஸ் முடித்து இருப்பார்கள்.

இந்தியன் 2 இரண்டாம் பாகத்தில் சந்துரு கமலுக்கு ஒரு மகன் இருந்தது போல சித்தார்த் நடித்திருப்பதாகவும் நேர்மையான அதிகாரியாக திகழும் அவருக்கு வரும் ஒரு பிரச்சனையை சமாளித்து அவரை காப்பாற்ற இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியாவுக்கு வந்து நேர்மையாக இருப்பவர்களையும் இருக்க விடாமல் செய்யும் விஷமிகளை வேர் அறுப்பார் என படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

டப்பிங் பணிகள் ஆரம்பம்:

இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு சுதந்திர தினத்துக்குத்தான் வரும் என அதிர்ச்சித் தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் முழு முயற்சி போட்டு வருவதாக கூறுகின்றனர்.

F8AS6F4awAAp7tZ

இந்நிலையில், போஸ்ட் புரோடக்சனின் இறுதி வேலையான டப்பிங் பணிகளை ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆரம்பித்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டப்பிங் ஸ்டுடியோவுக்கு கமல் மற்றும் ஷங்கர் வருகை தந்து இருவரும் இணைந்து பேசி டப்பிங் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

பொங்கல் போட்டி:

இதன் காரணமாக, அடுத்தாண்டு பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் போட்டிக்கு வருமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வரும் நிலையில் இந்தியன் 2 திரைப்படமும் போட்டி போட்டால் மிகப்பெரிய கிளாஷ் ஆக மாறும் என்கின்றனர்.

ஆனால், இன்னமும் இந்தியன் 2 சிஜி பணிகள் நிறைவடைய நாட்கள் எடுக்கும் என்றும் பொங்கலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர். குடியரசு தினத்தை குறிவைத்து ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களுக்கு ஹேப்பி தான்.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருப்பதாகவும், மறைந்த நடிகர்களை சில இடங்களில் மீண்டும் தொழில்நுட்பம் மூலம் கொண்டு வரும் வேலைகளையும் ஷங்கர் பார்த்திருப்பதாக கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews