இந்தியன் 2 படத்துக்கு இவ்வளவு பிரச்சனைகளா? அப்பாட… இப்பவாவது விடிவு காலம் வந்ததே..?!

இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடிக்க இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் 22 வருடத்திற்குப் பிறகு அதாவது 2018ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்ததில் இருந்தே அடி மேல் அடி தான். அடி மேல் அடி வைக்க அம்மியும் நகரும் என்றாற்போல படமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. இனி அன்று முதல் இன்று வரை இந்தியன் 2 படத்தின் நிலைமையைப் பார்ப்போம்.

இந்தியன் 2 தயாரிப்பாளர் தில் ராஜூ, கமல், இயக்குனர் ஷங்கர் ஆகிய 3 பேரும் தான் அறிவித்தார்கள். அறிவித்த ஒரு சில நாள்களிலேயே தயாரிப்பாளர் தில் ராஜூ விலகினார். அதன்பிறகு லைகா இந்தப் படத்தைக் கையில் எடுத்தார்கள். இந்த நேரத்தில் தான் கமல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்கள்.

அதனால் லேட் ஆனது. அப்புறம் படப்பிடிப்பு ஆரம்பித்தால் கமலுக்கு மேக்கப் அலர்ஜி. அதன்பிறகு கமல் பிக்பாஸ், அரசியல் சுற்றுப்பயணம் என பிஸியாகி விட்டார். அப்புறம் 2020ல் சூட்டிங் ஆரம்பித்தால் விபத்து 3 பேர் பலியாகி விட்டனர்.

Indian 3
Indian 3

அப்புறம் கொரானா வரிசையாக 2 லாக் டவுன், அதுக்கு அப்புறம் கமல் தனது சொந்தப் படமான விக்ரத்துக்குப் போய் விட்டார். அதன்பிறகு லைகா, ஷங்கர், கமல் என மூவருக்கும் கருத்து வேறுபாடு மும்முனை மோதலாக வந்தது. அதனால் படம் டிராப் ஆனாலும் பரவாயில்லை. எடுத்த வரை போதும் என்று நினைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பத்திரிகையில் செய்தி எல்லாம் இந்தியன் 2 டிராப் என்றே வந்து விட்டது. அதற்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படம் ஹிட்டானதால இந்தியன் 2 படத்தை ஸ்டார்ட் பண்ணினார். அதன் பிறகாவது இந்தப் படத்தை விறுவிறுப்பாக முடிச்சிடலாம்னு பார்த்தால் அதுக்குப் பிறகும் 2 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இப்போது தான் இந்தப் படத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

இதையும் படிங்க… 16 முறை மோதிய விஜய், விக்ரம் படங்கள்… ஜெயிச்சது யாருன்னு தெரியுமா?

இந்தியன் 2 படம் வரும் மே மாதம் 24ம் தேதி வெளியாகிறது என லைக்கா நிறுவனம் இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்தியன் 3 படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருவதால் இந்தியன் 2 படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்தியன் 3 படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவித்து விடுவார்கள்.

இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...