இந்த பக்கோடாவை ஒருமுறை செஞ்சு கொடுங்க. மீண்டும் மீண்டும் கேட்பாங்க…

வெங்காய பக்கோடா, கீரை பக்கோடா, பன்னீர் பக்கோடா என பல பக்கோடாக்களை சாப்பிட்டிருப்போம். முந்திரி பக்கோடா?! முந்திரி விலை அதிகமென்றும்., முந்திரியில் கொழுப்பு சத்துகள் அதிகமென்றும் வீடுகளில் முந்திரி பக்கோடா செய்வது மிகக்குறைவு.. முந்திரி பக்கோடாவை ஒருமுறை வீட்டில் செய்து பாருங்க. மீண்டும் மீண்டும் செய்ய சொல்வாங்க.

தேவையான பொருட்கள் :

முந்திரி பருப்பு – 30
மிளகாய் வற்றல் – 4
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
அரிசிமாவு – கால் கப்
கடலை மாவு – 1 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

முந்திரிபருப்பை நெய்யில் லேசான தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும். பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். கடைசியில் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும். இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

மிளகாய்க்கு பதிலாக மிளகாய் தூளும் சேர்க்கலாம்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews