இந்த ஒரு பொடி போதும்! இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…

சாம்பார் , சட்னி, குருமா, வடைகறின்னு இட்லி, தோசைக்கு தொட்டுக்க இருந்தாலும் இட்லிப்பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து சூடான இட்லிக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட்டால் தேவார்தமா இருக்கும். தோசை, உப்புமாக்கும் தொட்டு சாப்பிடலாம். அவசரத்திற்கு சுடு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுக்கவும். பருப்புகள் ஆறியதும் அவற்றுடன் உப்பு பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சூடு ஆறியதும் காற்று புகாத , பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

தேவைப்படும்போது பொடியோடு நெய் அல்லது நல்ல எண்ணெய் சேர்த்து குழைத்து சாப்பிடலாம்.

குறிப்பு

விருப்பபட்டால் மிளகு, கொள்ளு, கறிவேப்பிலை, வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம். இவற்றில் எதாவது ஒன்றினையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews