பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..

இன்று சினிமாவில் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டால் அதில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், மாறிய ரசிகர்களின் மனநிலையும் சினிமாவினை வேறொரு தளத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் இயக்குநர் என்பவர் படத்தினை இயக்குவதோடு மட்டும் அவரின் பணி முடிந்து விடும். ஆனால் 80 களின் பிற்பகுதியில் டி.ராஜேந்தர், விசு, பாக்ராஜ் போன்றோரின் வருகையால் சினிமாவில் சாதிக்க வெறும் நடிப்பு மட்டும் போதாது என்ற நிலையை அறிந்து சினிமாவின் அனைத்து பிரிவுகளிலும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர் சினிமா கலைஞர்கள்.

இன்று ஒரு நடிகரே இயக்கம், பாடல், இசை, தயாரிப்பு, திரைக்கதை என அனைத்ப் பொறுப்புகளையும் ஏற்று தங்கள் திறமையைக் வெளிகொண்டு வருகின்றனர். அந்தவகையில் இசைஞானி இளையராஜாவும் ஒரு சந்தர்ப்பத்தில் பாடலாசிரியராக மாறினார்.

தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்

மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் 1985-ல் வெளிவந்த படம் தான் இதயக்கோயில். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. பாடல்களுக்காகவே இந்தப் படம் ஹிட் ஆகியது. இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தது.

இதில் இடம்பெற்றுள்ள ‘இதயம் ஒரு கோயில்..‘ என்ற பாடல் இசைஞானி இளையராஜாவால் எழுதப்பட்டது. இந்தப் படத்திற்கான பாடல்களை வாலி, வைரமுத்து, மேத்தா ஆகியோர் எழுதிய நிலையில் ஒரு பாடலை அப்போது பிரபலமாக இருந்து பாடலாசிரியரான எம்.ஜி.வல்லபனை எழுதச் சொல்லியிருக்கிறார் இளையராஜா.

அப்போது மணிரத்னம் காட்சியின் சூழலை பாடலாசிரியருக்கு விவரிக்க ‘ஆடிடும் தென்னங்கீற்று..‘ என்று ஆரம்பித்து முழுப் பாடலையும் எழுதியிருக்கிறார். அதன்பின் இளையராஜா பாடல் வரிகளைப் பார்த்து டியூனுக்கு இந்த வரிகள் சரியாகப் பொருந்தவில்லை எனவே வேறு வரிகளைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மனதில் உதித்த வரிகள் தான் ‘இதயம் ஒரு கோவில்…‘. பின்னர் இளையராஜாவே இந்த வரிகளை வைத்து முழுப் பாடலையும் எழுதி முடித்திருக்கிறார்.

இப்பாடல் மூலமாகத்தான் முதன் முதலாக இளையராஜா பாடலாசிரியராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நேரம் பாடலாசிரியர்கள் வர இயலாத நிலையில் பல பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார். தான் இசையமைத்த முதல் படமான ‘அன்னக்கிளி‘யிலும் பின்னனி இசையின் பின்புலத்தில் பாடல்களைப் பாடியும் இருக்கிறார் இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.