நான் பாடகி ஆகவில்லை என்றால் வழக்கறிஞர் ஆகியிருப்பேன்… பிரகதியின் ஆசை…

பிரகதி குருபிரசாத் ஒரு சிங்கப்பூர்- அமெரிக்க பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் 2011-12 இல் நடத்தப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டு இரண்டாம் இடத்தை வென்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பிரகதி.

1997 ஆம் ஆண்டு பிறந்த பிரகதி தனது ஐந்து வயதில் இருந்தே கர்நாடக இசை பயிற்சியை தொடங்கினர். முன்னர் கலிபோர்னியாவில் வசித்த இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலீஸில் செட்டில் ஆகியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு ‘நெவெர் ஹேவ் ஐ எவர்’ என்ற அமெரிக்க நகைச்சுவை நாடகத்தில் சிறிய பாத்திரத்தில் தோன்றினார். இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் எழுதிய Sandham: Symphony Meets Classical Tamil என்ற ஆல்பத்திற்காக பிரகதி பிரபலமான தமிழ் சங்கக் கவிதையான ‘யாயும் ஞாயும்’ பாடினார். இது ஜூலை 2020 இல் Amazon’s Top#10 International Music albums இல் இடம்பெற்றது.

தற்போது பிசினஸ், ஹாலிவுட் படங்கள், தனி பாடல்கள் இயக்குவது என பிசியாக இருக்கும் பிரகதி தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளர். ஜாலியான கேள்விகள் அவருக்கு கேட்கப்பட்டன. அதில் நீங்கள் பாடகி ஆகவில்லை என்றால் என்னவாக ஆகியிருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரகதி, எனது நண்பர்கள் நான் சண்டையிடும் பொழுது நல்ல பாயிண்ட் எடுத்து பேசுற லாஜிக்கா சண்டை போடுறன்னு சொல்வாங்க. நான் பாடகி ஆகவில்லை அப்படின்னா கண்டிப்பா வழக்கறிஞர் ஆகியிருப்பேன். அந்த ஆசை எனக்கு நான் பள்ளியில் படிக்கும் போதே இருந்தது என்று கூறியிருந்தார் பிரகதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews