கோடி ருபாய் கொடுத்தாலும் இந்த விஷயங்களை செய்ய மாட்டேன்… மனம் திறந்த கங்கனா ரனாவத்…

கங்கனா ரனாவத், இந்தி திரைப்பட நடிகையும், மாடல் அழகியும் ஆவார். 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தலைவி . இதில் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெ. ஜெயலலிதா அவரகள் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பல நடிகைகள் இப்படத்தில் ஒப்பந்தமாக யோசித்தனர். ஆனால் எதை பற்றியும் கவலை கொள்ளாத கங்கனா ரனாவத் ஜெ ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தலைவியாகவே வாழ்ந்திருப்பார். அப்படி ஒரு அசாத்தியமான நடிப்பில் மக்களை கவர்ந்து மிகப் பிரபலமானவர்.

அண்மையில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்செண்ட் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் திருமணம் முடிவான நிலையில், தற்போது குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பல திரை பிரபலங்கள், அரிசியல்வாதிகள், வி. ஐ. பி கள் என பலர் கலந்துகொண்டனர். பிரபல பாடகி ரிஹானாவை பல கோடி ரூபாய் கொடுத்து வரவழைத்து பாட வைத்தனர். ஷாரூக் கான் போன்ற பாலிவுட் நடிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார்.

இதற்கிடையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கும் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் நடனம் ஆட அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கங்கனா ரனாவத் மறுத்துவிட்டாராம். அதற்கான காரணத்தை தற்போது மனம் திறந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், ‘ பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்கள் மட்டும் தான் எந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பாடுவதோ, நடனம் ஆடுவதோ இல்லை என்று உறுதியாக உள்ளோம். நான் நிறைய தடவை பொருளாதார சிக்கல்களில் மாட்டியிருக்கிறேன். எத்தனையோ முறை எனக்கு ஆசை காட்டியுள்ளார்கள். அனால் திருமண நிகழ்ச்சிகளிலும், விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாடுவது இல்லை என்ற முடிவில் இருந்து நான் மாறவில்லை. பணத்தை வேண்டாம் என்று சொல்வதற்கு நல்ல குணமும், தைரியமும் வேண்டும். பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இதை பகிர்ந்து கொள்கிறேன்’, என்று தெரிவித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...