மக்களுக்காக இந்த விஷயத்தை ப்ராமிஸ் பண்ணி கொடுக்கிறேன்… பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல்…

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக தனது பயணத்தை சின்னத்திரையில் தொடங்கியவர். கல கல பேச்சால் மக்களை ஈர்த்தவர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு ‘அழகிய பெண்ணே’, ‘இசை அன்ப்ளக்ட்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அடுத்ததாக சன் டிவியில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே அன்று முதல் இன்று வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியின் மூலமாக மக்களின் ஆதரவைப் பெற்று புகழடைந்தார் பிரியங்கா தேஷ்பாண்டே. மா கா பா ஆனந்த் உடன் இணைத்து ‘சூப்பர் சிங்கர்- அணைத்து சீசன்கள்’, ‘கிட்சன் சூப்பர் ஸ்டார்’, ‘முரட்டு சிங்கள்’ போன்ற ரியாலிட்டி ஷோக்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

இது மட்டுமல்லாமல் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவராகவும், ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் போட்டியாளராக பங்கேற்று முதல் ரன்னர் அப் – ஆக வெற்றி பெற்றார். அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினிகளுள் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக பேரும் புகழும் அடைந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலாட்டா யூ- டியூப் நிறுவனம் பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு ‘2023 ஆண்டிற்கான சிறந்த தொகுப்பாளினி’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. விருதை பெற்றுக் கொண்டு மேடையில் எமோஷனலாக பேசினார் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் கூறியது என்னவென்றால், மக்கள் அவ்வளவு அன்பை என்மேல் காட்டுறாங்க, அதுக்கு நான் தகுதியானவளா அப்படினு தெரியல, அவங்க அன்பு தான் என்னை மென்மேலும் ஓட வைக்குது, என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் மக்களை எண்டெர்டெயின் பண்ணிட்டே இருப்பேன், இதை மக்களுக்காக ப்ரோமிஸ் செய்து கொடுக்கிறேன் என்று கூறினார் பிரியங்கா தேஷ்பாண்டே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...