வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை பார்த்திட்டு இருக்கேன்… என் பொண்ணால மட்டும் தான் இந்த விஷயம் நடந்தது… அர்ச்சனா எமோஷனல்…

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் தான் அர்ச்சனா சந்தோக். 1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

இது மட்டுமல்லாது தமிழ் திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்து. இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பயணித்திருப்பர். இந்த படத்தில் இவரது மகளான சாராவும் அறிமுகமானார்.

இதற்கிடையில் அர்ச்சனா சந்தோக் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் கலவையான விமர்சனங்களையே பெற்றார். அதற்கு அடுத்ததாக தற்போது ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே ஆகவும் பணியாற்றி வருகிறார். இனிநிலையில் அர்ச்சனா சந்தோக் தற்போது அளித்த நேர்காணலில் கடந்த நான்கு வருடங்களாக சந்தித்த கடினமான சூழ்நிலைகளைப் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், கடந்த கோவிட் ஆரம்பித்ததில் இருந்து என் வாழ்க்கையில் போராட்டம் மட்டும் தான் இருந்து வருகிறது. கொரோனாவால் எனது மாமனாரும் மாமியாரும் பாதிக்கப்பட்டனர். கடுமையான மூச்சுத் திணறலால் வென்டிலேட்டரில் இருந்தனர். அவர்களை மீட்டு கொண்டு வருவது கஷ்டமாக இருந்தது. பின்னர் 2021 இல் எனக்கு மூளையில் ஒரு மேஜர் ஆபரேஷன் பண்ணினார்கள். நான் சில மாதங்கள் படுத்த படுக்கையாகி விட்டேன்.

இதற்கிடையில் எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். ஆனால் என் மகள் சாரா எங்களிடம் பேசி புரிய வைத்தாள். இன்று நானும் என் கணவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றால் அதற்கு முழுக்க முழுக்க என் மகள் தான் காரணம். அப்படி தொடர்ந்து போராட்டங்களை சந்தித்து இப்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார் அர்ச்சனா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews