நான் ரொம்ப பொறுமைசாலி… ரிலேஷன்ஷிப்ல இப்படி இருந்தா நல்லது… அட்வைஸ் சொன்ன மிர்னாளினி ரவி…

நடிகை மிர்னாளினி ரவி ஆரம்பத்தில் டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக் செயலியில் நடித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். அது வைரலாகி பின்னர் நடிப்பிற்கு வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடிகையாக வலம் வருகிறார்.

2019 ஆம் ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2019 இல் வெளியான ‘சாம்பியன்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதைப் பெற்றார்.

அதே ஆண்டான 2019 இல் ‘கத்தலகொண்ட கணேஷ்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்காக தெலுங்கில் சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதைப் பெற்றார். அடுத்ததாக ‘ஜாங்கோ’, ‘கோப்ரா’, ‘எனிமி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மிர்னாளினி ரவி.

தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மிர்னாளினி ரவி நடித்திருக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படம் இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ரிலேஷன்ஷிப்பை பற்றி உருவாகியுள்ள கதைக்களம் தான் ‘ரோமியோ’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகை மிர்னாளினி ரவி ‘ரோமியோ’ படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி என்ற கேள்விக்கு நான் ரொம்ப பொறுமைசாலி என்று பதிலளித்து இருந்தார். அடுத்து ரிலேஷன்ஷிப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை மிர்னாளினி ரவி, ஒருவர் கூட நாம் வாழுகிறோம் என்றால் நாம் உண்மையாக இருக்க வேண்டும். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் பிரச்சனை வந்தாலும் சரி, அந்த ஹீட்டட் மொமெண்ட்டில் பேசிவிட்டு அதோடு கோபம் போய்விடும். அப்படி இல்லாமல் இந்த விஷயத்தை சொன்னா பிரச்சனை வரும்னு நெனச்சிட்டு சொல்லாம மறைச்சீங்க அப்படினா ஒரே வீட்டில இருக்கும் போது கண்டிப்பா என்றாவது ஒருநாள் தெரிஞ்சிடும் அப்போ பிரச்சனை நினைச்சதை விட பெருசா இருக்கும். அதனால் உங்க பார்ட்னர்க்கு உண்மையா, நேர்மையா இருங்க என்று அட்வைஸ் சொல்லியுள்ளார் நடிகை மிர்னாளினி ரவி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...