சரஸ்வதிதேவியை விரதமிருந்து வழிபடுவது எப்படி?

சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்தால்தான், பிள்ளைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க வீட்டில் எப்படி விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.

காலையில் எழுந்து வீட்டினை சுத்தம் செய்து, கழுவி விடுதல் வேண்டும், மேலும் நாமும் தலைக்குக் குளித்து முடித்து பூஜை அறையினை சுத்தம் செய்தல் வேண்டும்.

பூஜை அறையில் உள்ள சரஸ்வதி புகைப்படத்தினை புதுத் துணியால் துடைத்து, புகைப்படத்திற்கு மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து, பூக்களால் மாலை செய்தல் வேண்டும். மேலும் சரஸ்வதிக்கு பூக்கள் மட்டுமல்லாது அருகம்புல்லிலும் மாலை செய்தல் வேண்டும்.

மேலும் நவராத்தி நாட்களில் அனைத்து அம்மனையும் வழிபடுவதோடு, சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை மனமுருகி விரதம் இருந்து வணங்கினால் நிச்சயம் சரஸ்வதியின் அனுகூலத்தைப் பெறலாம்.

மேலும் ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றி, மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்தல் வேண்டும், மேலும் தலைவாழை இலையில் பழங்கள், வெற்றிலை பாக்கு, அவல், பொரி கடலை, சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றினை வைத்து படைத்தல் வேண்டும்.

மேலும் புத்தகங்களையும் அம்மன் முன் வைத்து குங்குமம், சந்தனம், மஞ்சள் சேர்த்துப் படைத்தல் வேண்டும்.

Published by
Staff

Recent Posts