வாவ்… மீதமான சப்பாத்தியை வைத்து இவ்வளவு சுவையாக கொத்து சப்பாத்தி செய்யலாமா?? எப்படி செய்வது?

கொத்து சப்பாத்தி சைட் டிஷ் எதுவும் தேவைப்படாத ஒரு அருமையான உணவாகும். பொதுவாக உணவுப் பொருட்கள் ஏதேனும் மீதமாகிவிட்டால் அதனை வீணாக்க இல்லத்தரசிகளின் மனம் இடம் கொடுக்காது. அதை வைத்து புதிதாக வேறு ஏதேனும் சுவையான உணவு தயார் செய்ய முடியும் என்றால் அதை ஆர்வமுடன் செய்து மகிழ்வார்கள். இந்தக் கொத்து சப்பாத்தி அப்படி ஒரு சுவையான உணவு. 

உங்கள் குழந்தையை ஆச்சரியமூட்டும் ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி…! பீட்ரூட் சப்பாத்தி ரோல்!

IMG 20230623 131708

 

சப்பாத்திக்கு சைட் டிஷ் இல்லாமல் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட இந்த கொத்து சப்பாத்தியை முயற்சி செய்து பார்க்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
  • சப்பாத்தி – மூன்று
  • பெரிய வெங்காயம் – இரண்டு
  • தக்காளி – ஒன்று
  • முட்டை – இரண்டு
  • உப்பு – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
  • கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
  • சோம்பு – அரை ஸ்பூன்
  • பட்டை – இரண்டு துண்டு
  • கிராம்பு – இரண்டு
  • பிரியாணி இலை – ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
கொத்து சப்பாத்தி செய்யும் முறை:

images 3 4

சப்பாத்தியை முதலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை பொரிய விட வேண்டும்.

வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளியை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை சேர்க்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் விடும் வரை வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை விளக்கி கடாயின் நடுவில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.

முட்டை சிறிது வெந்ததும் கரண்டியால் அனைத்தும் ஒன்று சேர கிளற வேண்டும்.

ஏற்கனவே சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்த சப்பாத்தியை இதனுடன் சேர்த்து கிளறவும்.

இரண்டு மூன்று முறை அனைத்தும் ஒன்று சேர கிளறியதும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews