சாப்பிடுவதிலும் கூடவா இந்தக் கட்டுப்பாடு?!!! எந்த திசையில் அமர்ந்து எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

நாம் சாப்பிடும்போது எங்கே அமர்ந்து சாப்பிடுவது என்று தெரியாது. கிடைச்சால் போதும். எந்த இடத்திலாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து வயிறாற சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் வரும். ஆனால் சாப்பிடுவதற்கும் ஒரு நியதி உள்ளது.

அதை முறையாக செய்து பார்த்தால் நமக்கே ஆச்சரியப்படத்தக்க வகையில் சில மாற்றங்கள் உண்டாகும். அப்படி என்றால் செய்து விடுவோம் என்கிறீர்களா? வாங்க…எப்படி சாப்பிடுவதுன்னு பார்ப்போம்.

ஒரு சாண் வயிற்றுக்குத் தான் நாம் தினமும் ஓடா உழைக்கிறோம். காலையில் இருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை மாடாய் தேய்ந்து உழைக்கிறது எதுக்குன்னா இந்த ஒருசாண் வயிற்றுக்குத் தான் என்று எப்பேர்ப்பட்ட பணக்காரராக இருந்தாலும் சொல்லலாம். அதனால் சாப்பிடுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். நல்ல கல்வி, நல்ல ஞானம் கிடைக்கும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் கிடைக்கும். வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது.

eating
eating

அப்படி சாப்பிட்டால் நோய் நமக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இருக்குற நோயும் போகவே போகாது. தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நமக்கு அழியாத நீடித்த புகழ் கிடைக்கும்.

2 பேர் அமர்ந்து சாப்பிடும்போது திசை தெரியவில்லை எனில் அதுவும் இருவர் எனில் எதிர் எதிர் உட்கார்ந்து சாப்பிட்டால் எந்தவித தோஷமும் இல்லை. அதனால் தான் கல்யாண வீடுகளிலும், ஓட்டல்களிலும் இப்படி பந்தி போடுகிறார்கள். வீடுகளில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டாலும் தோஷம் கிடையாது.

ஒருநாள் ஒருவேளையாவது குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டால் அந்தக்குடும்பம் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும். கீழே உட்கார்ந்து சம்மணங்கால் போட்டு சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது. சிறிய பந்திப்பாய் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப நல்லது. உணவை சிந்தி சாப்பிடக்கூடாது. இலை முழுவதும் பரவ விட்டு சாப்பிடக்கூடாது.

இன்னொருவர் உணவின் பசிப்பிணியைப் போக்கக்கூடிய உணவை நாம் வீணாக்கினால் அதற்கான பாவம் நமக்குத் தான் வந்து சேரும். படுக்கையறையில் சாப்பிடுவது, ஹால்ல போய் உட்கார்ந்து சாப்பிடுவது, நின்னுக்கிட்டே சாப்பிடுவது, நடந்து கொண்டே சாப்பிடுவது என இந்த மாதிரி வேலைகளை நாம் செய்யக்கூடாது. சாப்பிடும்போது நாம் உணவுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

eating2
eating2
eating2
eating2o
eating2
eating2

சாப்பிடும் இடத்தில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். படுக்கையறையில் சாப்பிட வேண்டும் என்றால் பெட்டை நிமிர்த்தி வைத்து விட்டு சாப்பிடலாம். தண்ணீரைக் குடித்து குடித்து சாப்பாட்டை உள்ளே இறக்கக்கூடாது. சாப்பிடும் முன்பும், பின்பும் அரை மணி நேரத்திற்குள்ளாக தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட தட்டுகளிலேயேக் கையைக் கழுவக்கூடாது.

1 மணிநேரத்திற்குள் தண்ணீர் குடிக்க வேண்டும். நொறுங்கத் தின்றால் 100 ஆயுசு என்று கேள்விப்பட்டு இருப்போம். அதனால் நாம் நன்றாக கூழாகுற வரை அரைத்து உமிழ்நீரில் கலந்தாற்போல மெதுவாக சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது நக்கி நக்கி சாப்பிடக்கூடாது. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அருவருப்பு இல்லாமல் சாப்பிடுவது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.