கண்ணுக்கு மை அழகு… வீட்டிலேயே இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி?

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக சிரத்தை மேற்கொள்வது கண்களை அழகுப்படுத்துவதற்காக தான். அதிக ஒப்பனையை விரும்பாத பெண்களும் குறைந்தபட்சம் கண்களுக்கு மட்டுமாவது மையிட்டுக் கொள்வதை விரும்புவர்.

kajal 3

பொதுவாக காஜல், லைனர், மஸ்காரா என பலவிதமான பொருட்களைக் கொண்டு கண்களை அலங்கரிப்பர். அதிலும் குறிப்பாக காஜல் அதாவது கண்மை பெண்களின் பிடித்தமான அழகு சாதன பொருள் என்று சொல்லலாம். இந்த காஜல் என்னதான் பெண்களின் கண்களை அழகாக காட்டினாலும் கடைகளில் வாங்கும் காஜலில் ரசாயன பொருள் கலந்துள்ளது. சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான காஜல்களில் அதிக அளவு லெட் சல்பைட் உள்ளது. கிட்டத்தட்ட 50% இந்த லெட் கலந்துள்ளது.

உங்கள் குழந்தைக்கு கண்களில் மை வரைகிறீர்களா? இதை கொஞ்சம் படியுங்கள்!!!

kajal 2

எனவே அழகாகவும் அதே சமயம் கண்களுக்கும் உடலுக்கும் எந்தவித ஆபத்தையும் தராத படி காஜலை பயன்படுத்த விரும்பினால் நாம் இயற்கை முறையில் வீட்டிலேயே கண் மை தயாரித்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இரவில் கண்களில் கண்மை போட்டபடி உறங்க கூடாது என்று சொல்வார்கள். காரணம் அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தான். ஆனால் வீட்டில் தயாரிக்கும் கண் மை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை தருகிறது மேலும் நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

வீட்டிலேயே கண் மை செய்ய தேவையான பொருட்கள்:
  • சந்தன பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • அகல் விளக்கு – ஒன்று
  • நெய் – சிறிதளவு
  • பாதாம் – 3
  • மஸ்லின் துணி – சிறிதளவு
  • ஃபோர்க் – ஒன்று
  • ஸ்பூன் – ஒன்று
kajal 1
வீட்டிலேயே கண் மை தயாரிக்கும் முறை:

இரண்டு ஸ்பூன் சந்தன பவுடரில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த பேஸ்ட்டை திரி போடும் அளவிற்கு சிறிய மஸ்லின் துணியில் தடவி திரி போல திரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகல் விளக்கில் நெய் விட்டு இந்த சந்தனத்தை தடவி திரித்த திரியை வைக்கவும்.

இந்த அகல் விளக்கினை ஏற்றி அதன் நெருப்பில் பாதாம் ஒன்றினை ஃபோர்க்கில் குத்தி காண்பிக்க வேண்டும்.

பாதாம் எரிந்து அதிலிருந்து வெளிவரும் கரியை ஒரு ஸ்பூனில் பிடித்து சேகரிக்கவும்.

அந்த  ஸ்பூனில் படியும் கரி தான் கண்மை இதனை நெய்யில் குழைத்தும் பயன்படுத்தலாம்.

charcoal kajal

மற்றொரு முறையாக இரண்டு டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, அதற்கு இடையில் தயார் செய்த அகல் விளக்கினை ஏற்றி, அதன் மேல் ஒரு தட்டினை வைத்து ஃபோர்கில் பாதாமினை குத்தி தீயில் காட்டி அதிலிருந்து வெளிவரும் கரியை தட்டில் சேகரித்து பயன்படுத்தலாம்.

உதடுகளை பராமரிக்கும் சூப்பரான லிப் பாம்கள்! இனி வீட்டிலேயே செய்யலாம்…!!!

இது சற்று கடினமான முறையாக தோன்றினாலும் செய்து பார்க்கையில் எளிமையான ஒன்றுதான். கண்களுக்கு ஆபத்து தராமல் அழகையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews