சிறுநீரகத்தை சுத்தம் செய்ய எளிய வழி இதுதாங்க…!!

பெரும்பாலும் வயது ஏற ஏற பாதிக்கப்படும் முதன்மையான உறுப்பு சிறுநீரகம். கடைசி காலகட்டத்திலும் இந்தப் பிரச்சனையில் சிக்கி பலரும் இறந்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம்.

வந்தபின் காப்பதை விட, வருமுன் காப்பதே நலம். அதுதான் அறிவாளிகளின் செயல். அப்படி என்றால் அதை நாம் எப்படி சுத்தமாக வைத்திருந்தால் நோய் அண்டாமல் பாதுகாக்கலாம் என்று தெரிந்து கொள்வோமா…

தினமும் இந்த ஸ்டெப்பைப் பின்பற்றுங்கள். அதாவது ஒரு அரைலிட்டர் அளவு தண்ணீர் குடிங்க. அப்புறமா ஒரு டைரியை எடுத்து எப்போது சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதைக் குறியுங்கள். இதில் தண்ணீர் குடித்த நேரத்தையும் குறித்து வைக்க வேண்டும்.

அப்போது தான் எவ்வளவு நேரம் கழித்து சிறுநீர் வந்தது என்பதை நாம் கணக்கிட முடியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் எப்பவுமே சிறுநீரை நாம் அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தாலே அதை வெளியேற்றி விடுவதே உத்தமம்.

சிறுநீர் கழித்ததும் உடனே மறுபடியும் ஒரு அரை லிட்டர் தண்ணீர் குடிங்க. மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும் அல்லவா. அப்போது உடனே அதை வெளியேற்றி விடுங்கள். இப்படியே தொடர்ந்து 3 நாள்கள் பின்பற்றி வாருங்கள். அதற்காக உங்கள் வேலையும் கெட்டுவிடக்கூடாது. இது எதற்காக என்றால் ஒரு பரிசோதனை முயற்சி.

அதாவது முதல் முறை தண்ணீர் குடித்து சிறுநீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி தான் இரண்டாவது தடவை நீங்கள் சிறுநீர் கழிக்க ஆகும் நேரமாக இருக்க வேண்டும். அதே போல 2ம் முறை எவ்வளவு நேரம் வந்ததோ அதிலும் பாதிதான் 3ம் முறை நேரம் வர வேண்டும். இப்படி வந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

சிறுநீரகம் சுத்தமாக இருக்கிறதா என்பதை இந்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்தளவுக்கு சிறுநீரகம் சுத்தமாகும்.

water in glass
water in glass

தினமும் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் அல்லது 2 லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும். இது அவசியம். அப்படி குடித்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

அதேபோல சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது உங்களுக்கு தெரியவந்தால் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

புரதச்சத்து குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். சிக்கன், மீன் ஆகியவற்றை சாப்பிடாமலே இருப்பது மிகவும் நல்லது. காபி, சாக்லேட் என கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் உணவுப்பொருள்களை சாப்பிடவே கூடாது.

குதிரைவாலியை நாம் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. இது சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறுநீரகம் சுத்தம் செய்யவும் உதவுகிறது.

bananas
bananas

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய், தர்பூசணி ஆகிய பழங்களை எப்போதும் சாப்பிடலாம். சிறுநீரகத்தை சுத்தம் செய்பவை இவை தான்.

மெக்னீசியம் சிறுநீரகக் கற்களை வரவிடாமல் தடுக்கிறது. இதற்கு நாம் கீரைகள், பாதாம், சோயாபீன்ஸ், அவோகேடா, ஓட்ஸ் மீல் ஆகியவற்றை சாப்பிடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews