அட ஜவ்வரிசியில் இத்தனை நன்மைகளா?ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஜவ்வரிசி!

ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்க கூடிய ஒரு உணவுப் பொருளாகும். ஜவ்வரிசி என்றதும் பலருக்கு ஞாபகம் வருவது ஜவ்வரிசி பாயாசம், ஜவ்வரிசி வடகம் போன்றவை தான். ஆனால் இந்த ஜவ்வரிசியை கொண்டு பல வகையான உணவுகள் தயார் செய்யலாம். ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும் உணவுகள் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. வட இந்தியாவில் சபுதானா என்று அழைக்கப்படும் ஜவ்வரிசி கிச்சடியை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வர். குறிப்பாக விரத நாட்களில் பெண்கள் பெரும்பாலும் உண்பது இந்த ஜவ்வரிசி உணவு தான். விரத நாட்களில் பெண்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை இந்த ஜவ்வரிசி வழங்கும்.  

javvarisii

ஜவ்வரிசி ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது இதில் உள்ள புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடல் மற்றும் மனதை சுறுசுறுப்போடு வைத்துக் கொள்ள உதவுகிறது.

அனிமியா நோய் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி ஒரு வரப்பிரசாதம். உடலில் ரத்தத்தின் சிவப்பு ரத்த அணுக்கள் குறைந்து இரத்த சோகை ஏற்பட்டு இருந்தால் இந்த ஜவ்வரிசியை தொடர்ந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.

ஜவ்வரிசி விட்டமின் ஏ , விட்டமின் சி போன்ற விட்டமின்கள் நிறைந்துள்ள உணவுப் பொருளாகும். எனவே ஜவ்வரிசியை அடிக்கடி உண்பதால் விட்டமின் சத்துக்கள் உடலில் அதிகரிக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் வராமல் தடுத்திடும்.

javvarisi khichdi

ஜவ்வரிசியில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமை அடைய செய்யும்.

மேலும் இது அதிக அளவு புரதம் நிறைந்து கொழுப்பு சிறிதும் இல்லாத உணவுப் பொருளாகும். எனவே இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள இந்த ஜவ்வரிசி உதவுகிறது.

ஜவ்வரிசி நார்ச்சத்து நிறைந்த உணவு இதனை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. செரிமான சக்தியை அதிகரித்து குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல தீர்வாக ஜவ்வரிசி உள்ளது.

இந்தியாவில் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஜவ்வரிசி உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தம் ஏற்படாமல் காத்திடுகிறது.

javvarisi 2

பெண்கள் வாரம் ஒரு முறை ஜவ்வரிசியை தங்கள் உணவில் சேர்த்து வந்தால் மாதவிடாய் சமயத்தில் கூடுதல் ரத்தப்போக்கு ஏற்படுவது கட்டுப்படுத்தும். குறிப்பாக மாதவிடாயின் நான்காம் அல்லது ஐந்தாம் நாட்களில் இந்த ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்தரிக்க திட்டமிடும் பெண்கள் கருவுறும் சக்தியை அதிகரிக்க ஜவ்வரிசியை தயிருடன் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரு வளர்ச்சியையும் இந்த ஜவ்வரிசி அதிகரிக்கிறது.

பெண்களுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் மாதவிடாய் நின்று விடும். அந்த சமயத்தில் மாதவிடாய் நிற்பதற்கு முன்பிருந்தே ஜவ்வரிசியை சேர்த்து வந்தால் மாதவிடாய் நின்ற பின்பு ஏற்படும் கடுமையான உடல் சோர்வு, தலைவலி, உடல் பலவீனம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

மாதவிடாய் சமயத்தில் பல பெண்களுக்கு பசியின்மை அதிகம் இருக்கும். இப்படி பசி உணர்வு தோன்றாத சமயத்தில் கட்டாயம் ஜவ்வரிசி உணவை உண்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.

javvarisi 1

ஜவ்வரிசி என்றதும் பாயாசம் போன்ற இனிப்பு பொருட்கள் செய்ய பயன்படும் ஒரு உணவு பொருள் என்று சாதாரணமாக கருதாமல் இத்தனை நன்மைகளை உடைய இந்த ஜவ்வரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews