எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகி ஓட, தை அமாவாசைக்கு மறக்காமல் இதை முதலில் செய்யுங்க…!

2024ல் தை அமாவாசை தான் முதலில் வருகிறது. இந்த நாளில் நல்ல விஷயங்கள் செய்வதற்குத் தயங்க வேண்டிய தேவை இல்லை.

இந்த நல்ல நாளில் வில்வ குளியல் ரொம்பவே நல்லது. வில்வம் எல்லாவற்றையும் வெல்லும். வில்வம் இலையாக இருந்தால் மிக்சியில் போட்டு அரைக்கலாம். வில்வ பவுடர் என்றால் தண்ணீரில் கலந்து தலையில் தடவி குளிக்கலாம். அல்லது தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இப்படி குளிப்பதால் ஜென்ம பாவங்கள், தொடர்ந்து வரும் பிரச்சனைகள், தொடர்ந்து வரும் தடைகள் எல்லாம் எளிதில் விலகி விடும்.

சித்தர்கள் சொன்னதை எல்லாம் பற்றிக் கொண்டு அதைத் தொடர வேண்டும். நாம் இந்த ஆண்டில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் தடை படாமல் நடக்க வேண்டும் என்றால் முதலில் நம்மை நாமே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேலன்ஸ் பண்ணி வருவதால் தான் இக்கட்டான சில தர்மசங்கடமான சூழலில் இருந்து எளிதில் தப்பித்து வந்து விடுகிறோம். அது நமக்கு சாதகமாகவும் மாறி விடுகிறது. இதற்குக் காரணமே நமது தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தான். அதை வில்வ இலையால் சுத்தம் செய்து வெல்லும் வழிகளுக்குக் கொண்டு வருகிறோம்.

வில்வத்தைப் போல எந்த ஒரு இயற்கையான மூலிகை இல்லை. மனிதனை சுத்தப்படுத்தக்கூடிய அற்புத மூலிகை. அது சிவனின் அருள் சக்தியைக் கொண்டது.

அதே போல 7 பேருக்குத் தாளிக்காத தயிர் சாதத்தைக் கொடுத்தால் இன்னும் சிறப்பு. காக்கைக்கு வடை கொடுப்பது, குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவனின் பொருளால் அவரது அருளால் எந்த ஒரு விஷயமும் தோற்றதாக சரித்திரம் இல்லை.

நமக்கு முன்னால் ஏதாவது ஒரு தடை இருக்கும். நமக்கு முன் ஏதோ ஒரு படை வந்து நிறுத்தி வைத்து இருக்கும். அது நம்மை வழிநடத்தக்கூடிய படையா அல்லது நமக்கு எதிரான படையா என்று தெரியாது.

Thai Amavasai 1
Thai Amavasai 1

இந்த நல்ல நாளில் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ஆலமரத்தை அல்லது அரசமரத்தை 7 தடவை சுற்ற வேண்டும். இது நமக்கு பலத்தைக் கொடுக்கும். குலதெய்வ வழிபாடும், அமாவாசையில் பித்ருக்களின் ஆசி இருந்தால் வாழ்க்கையில் எந்தத் தடையும் இல்லாமல் நாம் முன்னேறிச் செல்லலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை வரும் 9.2.2024 தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் மாயன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.