உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த 15 நாள்கள்…. மறக்காம இதை மட்டும் செய்யுங்க…. கைமேல் பலன்..!

மகாளய பட்ச காலத்தில் அன்னதானம் செய்வதால் அந்தநாட்களில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போமா…

இந்த ஆண்டு மகாளயபட்ச காலமானது செப்டம்பர் 30 அதாவது புரட்டாசி 13ம் தேதி சனிக்கிழமை பிரதமை திதியில் தொடங்குகிறது. அக்டோபர் 14 அதாவது புரட்டாசி 27ம் நாள் (சனிக்கிழமை) அமாவாசையில் முடிகிறது.

Mahalaya patcham 1
Mahalaya patcham

முதல் நாள் பிரதமை திதியில் அன்னதானம் செய்வதால் நமக்கு பணம் கிடைக்கிறது. 2ம் நாள் துவிதியை திதி ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும், 3ம் நாள் திருதியை திதி நினைத்தது நடக்கும். 4ம் நாள் சதுர்த்தி திதி அதாவது மகாபரணி திதி என்றும் சொல்வர்.

இந்த நாளில் அன்னதானம் கொடுத்தால்பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம். எந்தத் திதியில் அன்னதானம் கொடுக்காமல் போனாலும் இந்தத் திதியில் கொடுத்து விட வேண்டும். 5ம் நாள் பஞ்சமி திதி. அதாவது வீடு, நிலம், சொத்துகள் வாங்கலாம்.

ஆறாம் நாள் சஷ்டி திதி புகழ் வந்து சேரும். 7ம் நாள் சப்தமி திதி சிறந்த பதவி கிடைக்கும். 8ம் நாள் அஷ்டமி திதி அதாவது மத்யாஷ்டமி திதி என்றும் சொல்வர். சமயோசித புத்தி, அறிவாற்றல் பெருகும். அதாவது பரணி திதியும், மத்யாஷ்டமி திதியும் அன்னதானம் செய்ய உகந்த நாள்கள்.

9ம் நாள் நவமி திதி சிறந்த வாழ்க்கைத் துணை, குடும்பத்திற்கு ஏற்ற மருமகள், பேத்தி, புத்திசாலித்தனமான பெண் குழந்தைகள் பிறக்கும், 10ம் நாள் தசமி திதி நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், 11ம் நாள் ஏகாதசி திதி படிப்பு, விளையாட்டுக் கலைகளில் வளர்ச்சி, 12ம் நாள் துவாதசி திதி தங்க நகை சேருதல், பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை மற்றும் தொழில் அமையும்.

13ம் நாள் திரயோதசி சதுர்த்தசியில் பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை, 14ம் நாள் மகாளய அமாவாசை முன் சொன்ன அத்தனை நன்மைகளும் கிடைக்கும். நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் நீங்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். பட்சம் என்றால் 15 நாள்கள். மறைந்த முன்னோர்கள் நம்முடன் 15 நாள்களும் தங்கும் காலம். மறைந்தவருக்கு மகாளயத்தைக் கொடு என்பார்கள். நம் மீது அக்கறை கொண்டு உதவியவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்யலாம்.

cow
cow

அதனால் அத்தனை பித்ருக்களும் அதாவது காரணிய பித்ருகளும் நமக்கு உதவி செய்வர். இந்தக் காலத்தில் காலையில் சுத்தமாகக் குளித்துவிட வேண்டும். தாம்பத்யம் இருக்கக் கூடாது.

இந்த நாள்களில் காலையிலேயே விளக்கு ஏற்றி முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இந்த நாள்களில் எள்ளும், தண்ணீரும் இறைத்து கால்படாத இடங்களில் கொட்டி விடுங்கள். இந்தக் காலத்தில் காலை 6.30 அல்லது 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும்.

ராகு காலம், எமகண்டம் தவிர்த்து கொடுக்க வேண்டும். காக்கைக்கு உணவு வழங்கல், அன்னதானம் செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...