ஏழேழு தலைமுறைக்கும் நன்மை தரும் மகாளயபட்ச காலம்..! மறந்தும் இருந்து விடாதீர்கள்… இருந்தும் மறந்து விடாதீர்கள்…!

புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை பிரசித்திப் பெற்றது. இந்த நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பசுக்கள், காகம் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதால் நமக்குப் பல்வேறு வகையான பலன்கள் கிடைக்கிறது.

சிலருக்கு அன்னதானம் செய்ய பணம் இருந்தும் மறந்து விடுவார்கள். அதே நேரம் சிலருக்கு அன்னதானம் செய்ய பணம் இருக்கும். மகாளய பட்ச காலத்தை எப்போது வருகிறது என்று தெரியாமல் மறந்து விடுவார்கள். உங்களுக்காகவே இந்தப் பதிவு.

crow
crow

புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி நாள் தான் நாம் கணக்கிட வேண்டியது. அதை அடுத்து வரும் பிரதமை திதியில் இருந்து வரும் 15 நாள்கள் தான் மகாளயபட்ச காலம். இந்த முறை புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 30 அதாவது புரட்டாசி 13ம் தேதி சனிக்கிழமை பிரதமை திதியில் தொடங்குகிறது. அக்டோபர் 14 அதாவது புரட்டாசி 27ம் நாள் (சனிக்கிழமை) அமாவாசையில் முடிகிறது. இத்தகைய அருமையான மகாளயபட்ச காலம் எப்படி உருவானது என்று பார்க்கலாமா…

Karnan2
Karnan

கர்ணன் மகாபாரத போருக்குப் பிறகு இறந்து விடுகிறார். எமன் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு கர்ணனுக்குப் பசிக்கிறது. அங்கு சாப்பாடு உள்ளதா என கேட்கிறார். அங்குள்ளவர்கள் இங்கு யாருக்கும் பசிக்காது. அதனால் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே தேவகுருவிடம் கேட்கிறார். கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்கச் சொல்கிறார். சுவைத்ததும் பசி தீர்ந்து விடுகிறது.

அதற்கான காரணத்தையும் கேட்கிறார். கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுகிறாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதே நேரம் நீ ஆட்காட்டி விரலை சுவைத்ததும் பசி தீர்ந்தது. இது எப்படி என்றால் ஒருமுறை ஒரு ஏழை பிராமணன் உன்னிடம் வந்து பசி என்று கேட்டான். நீ அன்னதானம் செய்வது கிடையாது என்பதால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை மட்டும் சுட்டிக் காட்டினாய். அதனால் அவனது பசி தீர்ந்தது.

கர்ணனின் கண்களில் நீர் திரண்டது. அன்னதானம் மட்டும் செய்யாமல் விட்டுவிட்டோமே என்ன செய்வது என்று எமதர்மராஜனிடம் கேட்கிறார். நான் ஒரு பட்சம் அதாவது 15 நாள்கள் மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும் என்று கேட்கிறார். நான் போய் அன்னதானம் செய்துவிட்டு வருகிறேன் என்கிறார்.

Mahalaya patcham
Mahalaya patcham

அதற்கு எமதர்மராஜனும் அனுமதிக்கிறார். கர்ணனும் பூலோகம் வந்து யாரும் கண்டுகொள்ளாத இடத்தில் அன்னதானம் செய்கிறார். 15 நாள்கள் மகிழ்வுடன் செய்கிறார். அது முடிந்ததும் எமதர்மனிடம் செல்கிறார். கர்ணனிடம் நீங்கள் சென்ற செயல் இனிதே முடிந்தது. இப்போது நீங்கள் வரம் கேட்கலாம். கர்ணன் எமதர்மனிடம் மனிதர்கள் முன்னோர்களுக்காகத் திதி கொடுக்க மறந்து விடுகிறார்கள்.

அதனால் இந்த பட்சத்தில் அவர்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். சந்ததியில்லாத முன்னோர்களையும் இது சென்றடைய வேண்டும். எமனும் மகிழ்வுடன் சம்மதிக்கிறார். இந்த பட்சகாலத்தில் யார் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியசாலிகள். விலங்குகளுக்கும்இ பறவைகளுக்கும் கொடுப்பது நல்லது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews