வராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள் பட்டை தீட்டி உருவாகியிருக்கிறார்கள். பலருக்கும் சினிமா வெளிச்சத்தைத் தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் பாரதிராஜா. அவரின் பட்டறையில் இருந்து உருவானவர்தான் நடிகர் இளவரசு.

மதுரை மேலூர்க்காரரான இளவரசு ஒளிப்பதிவாளர் கண்ணனிடம் உதவியாளராக இருந்தவர். முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகர் சிவாஜியை காட்டிக் கொடுக்கும் போட்டோகிராபர் கேரக்டரில் நடிப்பவர் வராத காரணத்தினால், இயக்குனர் பாரதிராஜா உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இளவரசை நடிக்க வைத்தார். இதுதான் இவருக்கு முதல் படமாக அமைந்தது.

மேலும் கடலோரக் கவிதைகள் படத்தில் சத்யராஜின் நண்பராக திரையில் காட்டி பாரதிராஜா அதன்பிறகு மீண்டும் அதே சத்யராஜையே கொலை செய்யும் காட்சியில் வேதம் புதிதி படத்திலும் இளவரசுவை நடிக்க வைத்திருப்பார்.

வேதம் புதிது படத்தில் பாலுத்தேவரைக் கொலை செய்யும் காட்சிக்கு தேர்ந்தெடுத்த நடிகர் வராத காரணத்தால் இளவரசுக்கு அடித்தது லக். பாரதிராஜா மனதில் தோன்றிய காட்சியை இளவரசு செம்மையாக நடித்துக் காட்ட அந்தப் படத்தில் அவரையே நடிக்க வைத்தார் இயக்குநர்.

எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்

அதன்பின் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இளவரசுக்கு வரவில்லை. ஆனாலும் ஒளிப்பதிவைக் கைவிடாத இளவரசு பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட படங்களுக்கு கேரமராமேனாக பணிபுரிந்துள்ளார்.

மனம் விரும்புதே உன்னை என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றார். 2000 ஆண்டிற்குப் பின் வரிசையாக இவருக்குப் படங்கள் வர ஆரம்பித்தது. காமெடி, வில்லன், குணச்சித்திரம், தந்தை என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் வெளுத்து வாங்கிவிடுவார் இளவரசு. இவரது பாடி லாங்குவேஜ் இவருக்கு மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்கிறது.

முத்துக்கு முத்தாக, என்.ஜி.கே., கலகலப்பு, சென்னை 28 போன்ற படங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா xx படத்தில் செருப்பால் அடி வாங்கும் காட்சியில் நடித்து தன் நடிப்புத் திறமையை நிரூபித்தார். தற்போது வரும் சினிமாக்களில் வருடத்திற்கு 10 படங்களிலாவது இளவரசுவின் பங்களிப்பு இல்லாத படங்களே இல்லை என்னும் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார் இளவரசு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews